Wednesday, March 16, 2011

CLOCX -குலொக்ஸ்

    இன்று நாம் பார்க்கப்போவது ஒரு டெஸ்க்டாப் கடிகாரம் பற்றி.இதன் பெயர் CLOCX .941KB அளவுடைய இது கணணி பயனாளர்களாகிய எமக்கு மிகவும் சிறந்தது.ஏனெனில் சில கடிகாரங்கள் எப்பொழுதும் டெஸ்க்டாப் இல் மட்டுமே தென்படும் ஏனைய விண்டோகளை திறந்தவுடன் மறைந்துவிடும்.ஆனால் இது அப்படியல்ல எல்லா இடமும் தென்படும்.


இதை நிறுவியவுடன் தோன்றும் கடிகார முகத்திலே வலது கிளிக் செயதால் தோன்றும் மெனுவில் OPTION என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் பல வசதிகள் உள்ளன.GENERAL TAB இலே TRANPARENCY ஐ கூட்டி குறைக்கலாம். அதுபோல் விண்டோ OPTION இலே உம் பல வசதிகள் உள்ளன.



APPEARANCE என்பதிலே கடிகாரத்தின் வடிவங்களை நமது ரசனைக்கு ஏற்ப மாற்றலாம்.PRESET OPTION என்பதிலே AM ,PM ,திகதி போன்றவற்றை செட் செய்யலாம்.கடிகாரத்தை நமது விருப்பம்போல் ஜூம் பண்ணக்கூடிய வசதியும் உள்ளது.



கடிகாரத்தின் மேல் வலது கிளிக் செய்து வரும் மெனுவில் ALARM என்பதை கிளிக் செயதால் தோன்றும் விண்டோ இல் ALARM செட் செய்யலாம்.நாம் விரும்பிய ஒலியையும் ALARM ஒலிக்கும்போது ஒலிக்கும்படி செய்யலாம்.எத்தனை செகண்ட் களுக்கு ஒலிக்க வேண்டும் என்பதையும் செட் செய்யலாம்.


கடிகாரத்தில் வலது கிளிக் செய்து வரும் மெனுவில் CALENDER என்பதிலே அன்றைய நாளை மட்டுமல்ல முந்தய வருடங்களையும் பார்க்க முடியும்.


இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த கடிகாரத்தை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள். நிச்சயமாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனது எனது எண்ணம்.

  
         

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!