Wednesday, December 31, 2014

2014 ஆம் ஆண்டுநடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிய வேண்டுமா?

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிய ஆவலா?

அவ்வாறெனில் நீங்கள் செல்லவேண்டிய தளம் http://www.endmemo.com/events/2014.php  ஆகும்.







2014 மட்டுமன்றி ஏனைய வருடங்கள் பற்றியும் இங்கு அறியலாம்.

நீங்களும் சென்று பாருங்கள்.


அனைவருக்கும் பிறக்கவுள்ள புது வருடம் சிறப்பாக அமையட்டும்.

Tuesday, December 30, 2014

uc வலை உலாவி -uc browser - android

இன்று நாம் பார்க்கப்போவது android போன்களில் பயன்படுத்தப்படும் உலாவியான uc உலாவியைபற்றி.



எத்தனையோ உலாவிகள் உள்ளபோதும் 13.1 mb அளவுள்ள இது மிகவும் வேகமாக செயற்படுகின்றது என்பது என் கருத்து.




முகப்பை பார்த்தால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தளங்கள் காணப்படுகின்றன.






அதுபோல் top sites,டவுன்லோட் zone, video music என்பன போன்ற தலைப்புக்களில் link குகள் காணப்படுகின்றன.











படங்களைப்பார்த்து மேலதிக விடயங்களை அறிந்து கொள்ளலாம்.






































பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.










Saturday, December 13, 2014

இன்னுமொரு காணொளி - word 2007 பற்றியது

இன்றும் இன்னுமொரு word சம்பந்தமான காணொளி ஒன்றை கண்டேன்.

ஆரம்ப நிலையிலிருந்து கற்போருக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.

உங்களுக்கும் உதவலாம் என்று நினைக்கிறேன்.

word பற்றி அக்கு வேறு ஆணி வேறாக கற்றவர்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்.



இந்த இணைப்பில் செல்லுங்கள்.

https://www.youtube.com/watch?v=XARUQZtNMrU 





Friday, November 28, 2014

how to use word 2007 - word 2007 ஐ பயன்படுத்துவது எப்படி?



word 2007 ஐ பயன்படுத்துவது எப்படி? என்று ஒரு வீடியோவை பார்த்தேன் .மிகவும் சுருக்கமாகவும் அதேவேளை தெளிவாகவும் விளக்கப்படுகிறது.

அதாவது ஒரு ஆவணத்தை எவ்வாறெல்லாம் எடிட் பண்ணலாம் என்று விளக்கப்படுகிறது.

word ஐ கரைத்துக்குடித்தவர்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்.


வீடியோ கீழே




Wednesday, November 5, 2014

GOOGLE இல் சிறு FUN

நாம் google ஐ தேடல் தேவைக்காக அதிகம் பயன்படுத்துகிறோம்.
இதைவிடவும் அதில் பல சுவாரசியமான விடயங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வாறான சில சுவையான விடயங்கள் பற்றி இன்று பார்ப்போம்.



1. 360 பாகையில் சுற்ற வேண்டுமா?

search bar இலே do a barrel roll என்று type பண்ணி enter பண்ணுங்கள். நடப்பதை பாருங்கள்.என்ன சுத்துதா?




2. உடைந்து விழும் google 

gravity என்று type பண்ணி முதலில் வரும் link இல் கிளிக் பண்ணவும்.என்ன நடக்கின்றது என பாருங்கள். அதுமட்டுமல்ல link களை தூக்கி எறியலாம்.





3. zerg rush 

மேலே உள்ளதுபோல் type பண்ணி enter பண்ணுங்கள்.பல O கள் வந்து எல்லா link களையும் உண்பதை காண்பீர்கள்.இறுதியாக இரண்டு G கள் மிஞ்சும்.







4. மறையும் எழுத்துக்கள்.

darkartsmedia.com/google.html எனும் முகவரி சென்று அங்கு தோன்றும் google எனும் சொல்லில் இரு O களின் மீது இரு விரல்களையும் வைத்து தேடல்பெட்டியின் வெளியே கிளிக் பண்ணவும். சில செக்கனின் பின் இரு o களும் மறைவதை காண்பீர்கள்.மீண்டும் தோன்ற அதேபோல் செய்யவும்.







5. சரியும் google 



செல்வாக்கு சரிவடையும் என்று கூறுவார்கள்.இங்கே google சரிகிறது.search bar இல் askew என்று type பண்ணி enter பண்ணுங்கள்.என்ன நடக்கிறது என்று பாருங்கள்.









செய்து பாருங்கள்.ஆச்சரியம் அடைவீர்கள்.





Tuesday, November 4, 2014

பயனுள்ள கல்வி தளம்

இன்று நான் சொல்லப்போவது ஒரு பயனுள்ள கல்வி தளம் பற்றி.




அதாவது கணணி,கணிதம் ,தொழில்நுட்பம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்து கற்றுத்தரும் தளம் இது.







முகப்பிலே உள்ள link களில் கிளிக் பண்ணி பாடத்தை படிக்கலாம். அது பல கிளைகளாக பிரிந்து விளக்கமாக பாடங்களை தருகிறது.



உதாரணமாக microsoft office எனும் link ஐ கிளிக் பண்ணினால் அது ms office இன் பல பதிப்புகளுக்கு இட்டுச்செல்லும்.







விரும்பியதை படிக்கலாம்.









படங்களின் உதவியுடன் விளக்குவதுடன்.வீடியோ மூலமும் விளக்கம் தரப்படுகின்றது.




இறுதியாக சிறு பயிற்ச்சியும் தரப்படுகிறது.











இவ்வாறு மாணவர்கள்,பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் உதவும் ஒரு தளமாக இதை கூறலாம்.



தள முகவரி  :   http://www.gcflearnfree.org




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



Wednesday, October 29, 2014

கேட்பதை கொடுக்கும் ASK

http://www.ask.com எனும் இந்த தேடுபொறியானது சற்று வித்தியாசமானது.

ஏனைய தேடுபொறிகளின் அம்சங்களுடன் சில சிறப்பு அம்சங்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.





answer, Q&A community, images, news,videos,the know, themes ஆகிய tab களை கொண்டுள்ளது.




answer tab ஐ கிளிக் பண்ணினால் அன்றைய நாளின் கேள்வி பதில்களை காணலாம்.


கேள்விகளில் கிளிக் பண்ணினால் அதன் விடைகள் காட்டப்படும். ஒரு பதில் அளித்ததும் அது சரியா பிழையா என்று காட்டுவதுடன் விளக்கமும் அளிக்கப்படும்.







இதனால் பொது அறிவு வளர்கிறது.
கீழே ஒவ்வொரு விடயங்களாக link குகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து கேள்வி பதில்களை பார்க்கலாம்.




அதுபோல் Q&A community tab ஐ கிளிக் பண்ணி பயனர்கள் அளித்த பதில்களை காணலாம்.


இவ்வாறு google,yahoo,bing போன்ற தேடுபொறிகளை விட சற்று வேறுபட்ட தேடுபொறியாக ask விளங்குவது கண்கூடு.


Sunday, October 26, 2014

புதிய வலைப்பதிவு....!!!!!

இன்றுமுதல் "பலதும் பத்தும்" எனும் தலைப்பில் புதிய வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.


இங்கு கணணி தவிர்ந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அலசப்படும்.


எனவே அங்கும் சென்று பாருங்கள்..


முகவரி :  http://babu1978.blogspot.com 

Sunday, October 19, 2014

magnifier

windows key மற்றும் + ஆகியவற்றை அழுத்துவதன் மூலம் தோன்றும் magnifier மூலம் செய்யக்கூடியவை பற்றி இன்று பார்ப்போம்.






- மற்றும் + ஆகிய விசைகளை அழுத்தி zoom ஐ கூட்டி குறைக்க முடியும்.







views என்பதிலுள்ள சிறு arrow வை அழுத்தினால் வரும் full screen,lens,docked,preview full screen   போன்றவற்றைக் கொண்டு பல செயல்களை செய்யலாம்.







முக்கியமாக lens மூலம் எழுத்துக்களை பெரிதாக பார்க்கலாம்.செவ்வக வடிவில்.







docked என்பதும் கிட்டத்தட்ட அதைத்தான் செய்கிறது.

option icon ஐ கிளிக் செய்து zoom அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.







முக்கியமாக எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்க உதவும் இந்த magnifier ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.

Friday, October 10, 2014

facebook இலே வீடியோக்கள் autoplay ஆவதை தடுப்பது எப்படி?

முகநூல் பக்கத்தில் பலர் வீடியோக்கள் பகிர்வார்கள்.

அவை தாமாகவே சிலவேளை [ auto } இயங்கிக்கொண்டு இருக்கும்.

அவை நமக்கு விருப்பமில்லாதவையாக இருந்தாலும் அவை இயங்கிக்கொண்டிருக்கும்.

அவை எல்லாவற்றையும் நம்மால் stop பண்ணிக்கொண்டிருக்க முடியாது.

எப்படி அவற்றை தாமாக இயங்காமல் தடுப்பது?


மிக மிக இலகு .setting சென்று video tab ஐ கிளிக் செய்யவும்.

அதில் auto play videos என்பதில் off என்பதை தெரிவு செய்யவும்.

அவ்வளவுதான்.

இப்போது home page சென்று பார்த்தால் auto play நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, October 8, 2014

விரும்பியதை பிரஸ் ஆக மாற்றுதல்

போட்டோசொப் இலே நீங்கள் விரும்பும் படத்தையோ அல்லது எழுத்தையோ அல்லது உங்கள் பெயரையோ ஒரு பிரஷ் ஆக மாற்றி விரும்பிய நேரம் அதை பயன்படுத்தலாம்.

எவ்வாறு மாற்றுவது ?

இது ஒன்றும் மலையை பிளக்கும் விடயம் அல்ல .
மிக மிக மிக இலகு..........

முதலில் new file ஒன்று open பண்ணுங்கள்.

பின் விரும்பிய பெயரை type பண்ணுங்கள்.

பின் edit ---->define brush preset சென்று கிளிக் பண்ணவும்.

அவ்வளவுதான்.

நீங்கள் உருவாக்கிய brush இப்பொழுது brush tool இல் இருக்கும்.









பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.

Saturday, September 13, 2014

instant translate - உடனடி மொழிமாற்றி

நீங்கள் ஒபேரா உலாவியை பயன்படுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு பயன்படும்.

instant translate எனும் இந்த add on பெயருக்கேற்றால்போல் உடனடியாகவே பொருளை நமது மொழியில் காட்டும் -சொல்லும்.

சுமார் 60 க்கு மேற்பட்ட மொழிகளில் மாற்றி தருகிறது.

நாம் பார்க்கும் தளத்தில் ஒரு சொல்லின் பொருள் தெரியவில்லை என்றால் அகராதியை புரட்ட தேவையில்லை.

உடனடியாகவே அந்த சொல்லை copy பண்ணி இதில் paste பண்ணினால் பொருள் கிடைக்கும்.

copy பண்ணிய சொல்லை translate என்பதில் paste பண்ணி translate என்பதை அழுத்தினால் நீங்கள் எந்த மொழியில் பொருள் கேட்டீர்களோ அதில் கிடைக்கும்.

ஒலி வடிவிலும் சொல்லை கூறும்.

படங்கள் எல்லாவற்றையும் சொல்லும்.




















இதை பெற இங்கு செல்லவும்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Thursday, September 4, 2014

காலநிலை பற்றிய தகவல்களை தரும் தளம். accuweather.com

இன்று நாம் காலநிலை தகவல்களை தரும் தளமான www. accuweather.com பற்றி பார்ப்போம்.

இங்கு   சென்று தளத்தை காணலாம்

தேடல் பெட்டியில் இடத்தையும் நாட்டையும் கொடுத்து தேடினால் அவ்விடத்தின் காலநிலை தகவல்கள் காட்டப்படும்.















இதைவிட  இப்பொழுது உள்ள நிலை, வாரத்தில் காணப்பட்ட நிலை, மாதாந்த தகவல்கள் என்றும் பார்க்கலாம்.












இதைவிட உலகின் காலநிலை தொடர்பான செய்திகளையும் பார்க்கலாம்.





இவ்வாறு பல்வேறு தகவல்களையும் தரவுகளையும் தரும் இந்த பயனுள்ள தளத்துக்கு நீங்களும் சென்று பாருங்கள்.




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.











Friday, August 29, 2014

HD WALLPAPERS - தளம்

இன்று நாம் பார்க்கப்போவது hd wallpapers களை அள்ளித்தரும் ஒரு தளம் பற்றி.

முகப்பு பக்கம் சென்றதும் lates wallpapers கள் காட்டப்படும். அதில் விரும்பியதை தெரிவு செய்யலாம்.





அல்லது categories wise ஆகவும் தெரிவு செய்யலாம்.






இதைவிட resolution wise ஆகவும் தெரிவு செய்யலாம். அதாவது நமது கணணி திரைக்கு பொருத்தமான அளவு.







மேலும் menu bar இலே most popular wallpapers என்பதை தெரிவு செய்து அதிகம் பிரபலமான wallpapers களை தெரிவு செய்யலாம்.


top download என்பதில் அதிகம் பேர் download செய்த wallpapers களை தெரிவு செய்யலாம்.


எப்படி download செய்து பயன்படுத்துவது ?


முதலில் விரும்பிய படத்தின்மேல் கிளிக் செய்யவும் .தோன்றும் படத்தின் resolution ஐ தெரிவு செய்யவும்.







தெரிவு செய்தவுடன் தனி tab இல் படம் தோன்றும்.







அதில் வலது கிளிக் செய்து save பண்ணவும்.

பின் படத்தை background ஆக பயன்படுத்தலாம்.

தள முகவரி : http://www.hdwallpapers.in


பயன்படுத்துங்கள். பயன்பெறுங்கள்.

Monday, August 25, 2014

font group option in word 2007 - font group இல் சில செயற்பாடுகள்

இன்று நான் word 2007 இல் font group இல் உள்ள செயற்பாடுகள் பற்றி கூறும் சிறு நூல் ஒன்றை தருகின்றேன்.




அதற்கு முன்.........

#  இது என் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு மாத்திரம் என்பதையும்,
#  இதில் ஏதாவது பிழைகள் இருந்தால் மன்னிக்கும்படியும்,
# font option இல் உள்ள சில விடயங்கள் ஆழமாக விளக்கப்படவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

mediafire இல்  இங்கு சென்று pdf book ஐ பதிவிறக்கலாம்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, August 3, 2014

word 2007 இல் word art பகுதியூடாக ஆவணத்தை அழகுபடுத்தல். pdf நூல்

இன்று இப்பதிவினூடாக word 2007 இலே word art மூலம் சொல் ஒன்றை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பது பற்றி pdf நூல் மூலம் விளக்க உள்ளேன்.(படங்கள் மூலம்)  


இது என்போன்ற கற்றுக்குட்டிகளுக்கே மேதைகளுக்கு அல்ல.


இப்புத்தகத்தை இங்கு சென்று பதிவிறக்கலாம்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, July 30, 2014

ஒரு web பக்கத்தை எப்படி pdf பக்கமாக சேமிப்பது?

நாம் பார்க்கும் ஒரு web பக்கத்தை சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படலாம் .அவ்வேளையில் அதை pdf பைலாக சேமித்து வைத்தால் உதவியாக இருக்கும்.

ஆகவே எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் pdf பைலாக மாற்றுவது என பார்ப்போம்.( இங்கு chrome browser பற்றியே கூறப்பட்டுள்ளது.)

முதலில் நீங்கள் pdf ஆக சேமிக்கவேண்டிய பக்கம் செல்லுங்கள்.பின் customize button சென்று print செல்க.




தோன்றும் விண்டோவில் default பிரிண்டர் காணப்படும்.அதை மாற்றவேண்டும்.change button கிளிக் பண்ணி save as pdf என்பதை தெரிந்து எடுக்கவும்.







மேலும் அதே விண்டோவில் முழுப்பக்கமும் வேண்டுமா ஒரு சில பக்கங்கள் வேண்டுமா என்பதையும் இன்னும் சில தெரிவுகளும் உள்ளன.

எல்லாம் தெரிவு செய்தபின் save என்பதை அழுத்தவும் .






அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!