Sunday, January 30, 2011

FALCO REGISTRY DOCTOR

இன்று நாம் பார்க்க இருப்பது FALCO REGISTRY DOCTOR பற்றி.இது நமது REGISTRY ஐ ஸ்கேன் பண்ணி பிழை செய்திகளை கண்டுபிடித்து அவற்றை விரைவாக அழிக்கிறது. நமது கணணியை சரியாகவும் வேகமாகவும் வேலை செய்ய வைக்கிறது. நமது OS இன் ஆற்றல் இதனால் பாதிக்கப்படலாம் என்று கவலைப்பட வேண்டாம். 

அது மட்டுமல்ல REGISTRY ஐ DEFRAGMENTATION செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த புரோக்கிராமை பாவிப்பதால் ஆரம்பத்தில் கணணி எவ்வாறு வேலை செய்ததோ அதுபோல் வேலை செய்யும். 


மிக இலகுவான இடைமுகத்தை கொண்ட இந்த புரோக்கிராமை செயற்படுத்துவது மிகவும் இலகுவானது. 
2 .6 MB அளவு கொண்ட மிக சிறிய புரோக்கிராமான இதனை விண்டோஸ் இன் எல்லா பதிப்புக்களிலும் பயன்படுத்தலாம். 
இவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட இதனை பெற செல்ல வேண்டிய முகவரி  
   

Friday, January 28, 2011

BEST FREE IMAGE CONVERTER
இன்று நாம் பார்க்க இருப்பது பெஸ்ட் ப்ரீஇமேஜ் கன்வெர்ட்டர் பற்றி.எந்த வகையான இமேஜ் போர்மட்களையும் விரும்பிய போர்மட்களுக்கு மாற்றக்கூடியது இது.  


ADD SOURCE FILE என்பதில் நாம் கன்வெர்ட் செய்ய வேண்டிய படத்தை ஓபன் செய்துகொள்ள வேண்டும். அதன் பின் பின்வருமாறு டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். 


பின்னர் வலது பக்கம் உள்ள PREVIEW பகுதியில் SOURCE என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின் இவ்வாறு தோன்றும். 


இனி அதன் கீழுள்ள CONVERT OPTION   TAP களில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். PDF FILE ஆக மாற்றும் வசதியும் உள்ளது.  


இவ்வாறு எல்லா மாற்றங்களையும் செய்த பின் ஸ்டார்ட் கன்வெர்ட் எனும் பொத்தானைஅழுத்தியதும் படம் மாற்றப்படும். 
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்ட இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் . கருத்தைக்கூறுங்கள்.  
இதை பெற செல்ல வேண்டிய முகவரி 






Wednesday, January 26, 2011

cpu & ram meter 

இன்று நாம் பாக்க இருப்பது CPU & RAM METER பற்றி.மிகவும் சிறிய பயனுள்ள மென்பொருளான இது CPU மற்றும் RAM பற்றிய சில தகவல்களை தருகிறது. அதாவது பாவிக்கப்பட்ட மெமரியின், CPU வின்  அளவுகளை காட்டுகிறது.அத்துடன் எவ்வளவு நேரமாக கணணி வேலை  செய்து கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.


மிகவும் பயனுள்ள இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள் .கருத்து ஒன்றை விட்டுச்செல்லுங்கள்.  
இதை பெற செல்ல வேண்டிய முகவரி http://www.mznt.blogspot.com   







  

Tuesday, January 25, 2011

 ஸ்மார்ட் ஸ்க்ரீன் ரெகார்டர் 

இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்மார்ட் ஸ்க்ரீன் ரெகார்டர் பற்றி. இந்த SOFTWERE ஐ பயன்படுத்தி நம் கணனியின் செயல்பாடுகளை வீடியோவாக SAVE பண்ண முடியும் மிக இலகுவாக .  

மூன்று வகைகளில் CAPTURE பண்ணலாம். FULL SCREEN,CUSTOM AREA,SELECT WINDOW என்ற மூன்று தெரிவுகள் உள்ளன. நமக்கு தேவையான பகுதியை தெரிவுசெய்து CAPTURE பண்ணலாம். தேவையான விண்டோ வை ஓபன் பண்ணி ரெகார்ட் பொத்தானை அழுத்தியதும் ரெகார்ட் ஆரம்பமாகும். 


கிபோர்ட் டில் F9 KEY ஐ அழுத்தியதும் ரெகார்ட் பினிஷ் ஆகும் .பின்னர் பிளே பொத்தானை அழுத்தியதும்  வீடியோ PLAY ஆகும். வீடியோ போர்மட் ஐ மாற்றுவதற்கு VIDEO என்பதை கிளிக் செய்து போர்மட் என்பதில் உங்களுக்கு தேவையான போர்மட்டில் மாற்றலாம்.


அது மட்டுமன்றி ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்கும் வசதியும் உண்டு. இவ்வாறு பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருளை பயன்படுத்திபார்த்து கருத்துக்களை கூறுங்கள்.
செல்ல வேண்டிய முகவரி http://smart-screen-recorder.soft32.com/free-download  



Monday, January 24, 2011

உங்கள் கணனியின் இணைய வேகத்தை அதிகரித்தல்  

இது ஒரு இலகுவான இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி. இதற்காக எந்தவொரு மென்பொருளும் தேவையில்லை. பின்வரும்  படிமுறைகளை கையாண்டு உங்களது இணைய வேகம் அதிகரிப்பதை காணுங்கள். 

1. my computer ஐகனை வலது கிளிக் செய்து manage--->device manager 
செல்லுங்கள் .



2. பின்பு ports-->Communication Port-->டபுள்  கிளிக்  செய்யுங்கள் 
3. பின்னர் நீங்கள்  Communication Port properties.ஐ காண்பீர்கள். 
4. பின்னர் Port Setting செல்லுங்கள். 
5. அங்கு “Bits per second” என்பதில் 128000 ஐ தெரிவு செய்யுங்கள்.


பின்னர் “Flow control” சென்று change 2 Hardware.
அவ்வளவுதான் இனி உங்களது இணைய வேகம் அதிகரிக்கும்.

பதிவு பற்றிய கருத்தை கூறுங்கள்.


Sunday, January 23, 2011

FILE SEARCHEX

இன்று நாம் பார்க்கப்போவது FILESEARCHEX எனும் மென்பொருள் பற்றி. நமது கணனியிலுள்ள பைல்களை SEARCH எனும் பகுதி மூலமாக தேடமுடியும் என்பது நமக்குத்தெரியும். எனினும் அந்த SEARCH மூலம் தேடுகையில் அதிக நேரத்தை செலவிட வேண்டும். 
ஆனால் இந்த மென்பொருள் மூலமாக மிகவும் விரைவாகவும் அதேவேளை பைல் பற்றிய தகவல்களையும் பெறலாம். 


இரு முறைகளில் தேடும் வசதி உள்ளது .பைலின் பெயரைக்கொடுத்தும் தேடலாம் . டிரைவ் வின் பெயரைக்கொடுத்டும் தேடலாம். SEARCH FOR FILES  OR FOLDERS  NAMED என்பதில் பைல் அல்லது போல்டரின் பெயரைக்கொடுத்து தேடலாம். LOOK IN  என்பதில் டிரைவ் களின் பெயரைக்கொடுத்து தேடலாம்.  

மிகவும் சிறிய கொள்ளளவு உடைய இதனை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் .கருத்து ஒன்றை பதிவு செய்யுங்கள். 
இதனை பெற செல்ல வேண்டிய முகவரி WWW.SOFT32.COM/DOWNLOAD/FREE/FILESEARCHEX/4-253013-1.HTML

Saturday, January 22, 2011

GREEN FORCE PLAYER

இன்றும் நாம் ஒரு சிறிய அதே நேரம் சிறந்த மீடியா பிளேயர் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதன் பெயர் green force player . பில்லி போன்று சிறிய மென்பொருள் என்றாலும் அதன் செயற்பாடும் தரமும் நன்றாகவே உள்ளது.


ஏனைய பிளேயர் போலவே FILE மெனு சென்று பாடல்களை லோட் செய்ய வேண்டும் .பின்னர் ஓபன் செய்து பாடல்களை கேட்கலாம். அது மட்டுமல்லாது ஆடியோ CD யிலுள்ள பாடல்களையும் இந்த பிளேயர் மூலம் கேட்கலாம்.


மேலும் FILE மெனுவிலுள்ள OPTION பகுதிக்கு சென்று தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். 

இவ்வாறு மேலும் பல வசதிகள் கொண்ட GREEN FORCE பிளேயர் ஐ நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். கருத்து ஒன்றை எழுதுங்கள்.

GREEN FORCE பிளேயர் ஐ பெற செல்ல வேண்டிய முகவரி http://gf-player.soft32.com/free-download  



Thursday, January 20, 2011

                                          DEFRAGGLER மென்பொருள் 




இன்று DEFRAGGLER மென்பொருள் பற்றி பார்ப்போம். 
எத்தனையோ DEFRAGMENTATION மென்பொருட்கள் இருந்தாலும் மிகவும் சிறிய கொள்ளளவுடைய இந்த மென்பொருள் விரைவாகவும் அதேவேளை சிறப்பாகவும் நமது கணணியை DEFRAG செய்கிறது. 

அநேகமான DEFRAG டூல்ஸ் DEFRAG செய்யும்  போது முழு டிரைவ் வையும் ஒன்றாக DEFRAG செய்யும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் நமது விருப்பத்துக்கேட்ப பைல்கள், போல்டர்கள் என்று தெரிவு செய்து DEFRAG செய்யலாம். 
இதேவேளை DEFRAGMENTATION எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கலாம். இதை  drive map மூலம் பார்க்கலாம்.   


இந்த மென்பொருள் பற்றிய மேலும் சிறப்புக்கள் ஆங்கிலத்தில்............ 
  • Give your hard drive a quick touch-up with Quick Defrag
  • Organizes empty disk space to further prevent fragmentation
  • Defragment while you sleep - and wake up with a faster PC. Set Defraggler to run daily, weekly or monthly
  • Full Windows OS and Multi-lingual support
  • Boot time defrag of system files
  • Supports 37 major languages

இதனை பெற செல்லவேண்டிய முகவரி http://www.piriform.com/defraggler  
சென்று  பயன்படுத்தி  பாருங்கள் .பதிவு பற்றிய கருத்தை எழுதுங்கள்.   

Wednesday, January 19, 2011

                                                       

               Any Video கன்வெர்ட்டர்


                                            

இன்று நாம் பார்க்க இருப்பது எனி  வீடியோ கன்வெர்ட்டர் . avc என சுருக்கமாக அழைப்போம். all in one   என்று  சொல்லலாம் . அத்துடன்  வேகமாக  covert செய்வதுடன்  தரமான  video வையும்  தருகிறது .  பின்வரும் போர்மட் களை சப்போர்ட் செய்கிறது. DivX, XviD, MOV, rm, rmvb, MPEG, VOB, DVD, WMV, AVI to MPEG-4 movie format for iPod/PSP
 
மேலும் ipod , mp4  பிளேயர்களுக்குரிய போர்மட்டுக்களிலும் அவுட் புட் வீடியோக்களை பெறலாம். இதன் மேலும் பல சிறப்புக்கள் ஆங்கிலத்தில்...................

  • User-friendly interface that is easy to use.
  • Converts all video formats to Apple iPod Video, Sony PSP and more
  • Batch convert any video formats including avi, wmv, asf, mpg, mp4, etc.
  • Support DivX and Xvid avi format as importing and exporting video
  • Support default video/audio settings or user customized parameters for video and audio.
  • Has the option to preview the video in real-time before conversion .
  • World's fastest video conversion speed with stunning video and audio quality.
  • Supports adjust many video/audio options for MP4 files. For example, video/audio sample rate, bit rate, video size...            
 
இதை பெற செல்ல வேண்டிய முகவரி http://www.any-video-converter.com/   

பயன்படுத்தி  பாருங்கள்  எண்ணத்தை சொல்லுங்கள் .7

Tuesday, January 18, 2011

                  FOOBAR 2000 AUDIOPLAYER
  


FOOBAR 2000 AUDIOPLAYER  பற்றி இன்று பார்ப்போம். இது MP3 ,AAC ,CD AUDIO ,WMA ,VORBIS ,FLAC ,WAVPACK ,WAV ,AIFF ,MUSEPACK ,SPEEK ,AU ,SND போன்ற போமர்ட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது .மேலும் இதன் சிறப்புக்கள் சில ........
1 .தொடர்ச்சியான PLAYBACK
2 .முழுமையான UNICODE சப்போர்ட்
3 .இலகுவான பயனர் இடைமுகம்.
4 .அட்வான்ஸ் TAGGING திறமை. 
5 .ஆடியோ CD களை ரிப்பிங் செய்ய வல்லது
6 .முழு REPLAY GAIN சப்போர்ட் 
7 . கீபோர்ட் கொண்டும் இயக்கலாம்.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட இந்த பிளேயர் ஐ நீங்களும் இயக்கி பாருங்கள். கருத்து எழுதுங்கள். இதை பெற http://www.foobar2000.org/download செல்லவும்.
 

Saturday, January 15, 2011


எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 


















தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். '' எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகட்கு '' என்ற வாக்குக்கு ஏற்ப தமது வாழ்வுக்கு வழிகாட்டிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர் பெருமக்களுடன் உலகெங்கும் வாழும் தமிழர் இன்று தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர்.   


                           இன்றைய பதிவில் billy mp3 player பற்றி பார்ப்போம்.



சிறுவர் ,இளைஞர் ,வயோதிபர் என அனைவரும் இசை என்றால் மெய் மறக்கின்றனர்.எமது வாழ்வில் ஏற்படும் சலிப்பை போக்குவது இசை என்றால் யார் மறுப்பார்? 
கணணி வாசிகளுக்கு ஏராளமான மீடியா பிளேயர் இன்று கிடைக்கின்றன. என்றாலும் அதில் எது சிறந்தது என்ற கேள்வி எழும்போது பலர் குழம்பி போகின்றனர். என்னைப்பொறுத்தவரை கணணியிலே பணி புரிந்துகொண்டே பாடல் கேட்க சிறந்த பிளேயர் எது என்றால் அது பில்லி தான் என்பேன். 


மிக குறைந்த கொள்ளளவு உடைய இதன் சிறப்புக்கள் சில. 
1.mp3 ,waw , ogg வகை file களையும் இயக்கும்
2..ஒரு செக்கனில் 1000௦௦௦ mp3 file களை ஏற்றிக்கொள்ளும்.   
3.100௦௦% மும் கிபோர்ட் மூலம் இயக்கலாம்.  


இவ்வாறு மேலும் பல சிறப்புக்கள் கொண்ட இந்த பில்லி mp3  பிளேயர் ஐ நீங்களும் உபயோகித்து பாருங்கள் . பதிவு பற்றிய உங்களது கருத்துக்களையும் சொல்லுங்கள். தள முகவரி www.sheepfriends.com/files/billy104k.zip



Wednesday, January 12, 2011

இலவசEnglish-Tamil Computer Technical Dictionary

   கணனியில் பணிபுரியும்போது பல்வேறு கலைசொற்களுக்கு பொருள் காணவேண்டியுள்ளது .சில சொற்கள் நமக்கு பரிச்சயமாக இருக்கும்:சிலசொற்கள்  புரியாமல் இருக்கும் .இவ்வாறான சிக்கலை தீர்க்க இருக்கிறது இந்த இலவசEnglish-Tamil Computer Technical Dictionary இதிலே கணணி தொடர்பான பல தொழில் நுட்ப சொற்களுக்கு தமிழில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகத்தை பெற இங்கு  http://www.4shared.com/get/7m6y22kT/English-Tamil_Computer_Technic.html செல்லவும் .pdf பைலாக தரவிறக்கி பயன்படுத்தலாம்.   கணணி வாசிகளுக்கு இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நம்புகின்றேன்.படித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். 

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!