Tuesday, June 28, 2011

அட்ரஸ்பாரை calculator ஆக பயன்படுத்தலாம்.

  இன்று நாம் ஒரு சிறு டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.அதாவது நம் உலாவியின் அட்ரஸ் பாரை எவ்வாறு calculator ஆக பயன்படுத்துவது என்பது பற்றி.
ஒன்றும் பெரிய விடயமல்ல.புதிய டப் ஒன்றை திறவுங்கள்.அதிலே நீங்கள் விடை காண வேண்டிய கணக்கை டைப் பண்ணுங்கள்.கண் இமைக்கும் நேரத்தில் விடை தெரியும்.அவ்வளவுதான். 
உதரணத்துக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.




Friday, June 10, 2011

பயனுள்ள Alarm Clock

இன்று நாம் பார்க்க உள்ள மென்பொருள் Alarm Clock ஆகும்.இது நேரத்தை டிஜிட்டல் முறையில் காட்டுவதுடன் அலாரமும் அடிக்க கூடியது.


அத்துடன் விரும்பிய இடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.மேலும் அதன்மேல் வலது கிளிக் செய்தவுடன் தோன்றும் மெனுவில் setting என்பதில் சென்று பல மாற்றங்களை செய்யலாம்.அதன் அளவை மாற்றலாம்.அதற்கு setting சென்று scale என்பதை தெரிவு செய்ய வேண்டும். 


அதிலே show என்பதில் திகதி,செகண்ட் போன்றவை காட்டப்பட வேண்டும் எனில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அலாரம் பகுதியில் அலாரம் செட் பண்ண முடியும்.


reminder என்பதில் நமக்கு எதாவது ஒன்றைப்பற்றி இத்தனை மணிக்கு அல்லது நிமிடத்துக்கு ஞாபகப்படுத்த  வேண்டும் என செட் செய்யலாம்.

இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இதை http://www.downloadmost.com/freeware/download/?Alarm%20Clock-7-17306.html  சென்று தரவிறக்கி பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.







  
   

Monday, June 6, 2011

பயனுள்ள font viewer

இன்று நாம் பார்க்க இருப்பது சுமார் 360kb மட்டுமே உள்ள பயனுள்ள font viewer மென்பொருள் பற்றியாகும்.

இது நம் கணனியிலுள்ள font களை சிறப்பாக முன்பார்க்கை செய்வதற்கு உதவுகிறது.


மேலும் பொன்ட் அளவுகளை மாற்றியும் பார்க்கலாம்.இடது பக்கம் உள்ள பொன்ட்களின் பெயர்களை கிளிக் செய்யும்போது வலது பக்கமுள்ள திரையில் அதன் முன்பார்க்கை தென்படும்.இதன் மூலம் நமக்கு தேவையான பொன்ட்ஐ தெரிவு செய்யலாம்.

மிகவும் பயனுள்ள இந்த மென்பொருளை பெற செல்ல வேண்டிய முகவரி:

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.
   

Wednesday, June 1, 2011

வினோதமான DESKTOP EYES

இன்று நாம் பார்க்க போகும் APPLICATION ஒரு வினோதமான ஒன்று.இது நமது பக்கங்களில் வரக்கூடியது.மௌஸ் POINTER செல்லும் எல்லா திசைகளிலும் இது பார்க்கும். இதன் பெயர் DESKTOP EYES.
வெறும் 126KB கொள்ளளவு உடைய இதை http://www.freewarefiles.com/DesktopEyes_program_21700.html சென்று பதிவிறக்கவும்.பின்னர் அதன் ஷோர்ட்கட் ஊடாக சென்று செயல்படுத்தலாம்.

இரண்டு கண்கள் நாம் செல்லும் பக்கங்களில் எல்லாம் வந்து மௌஸ் செல்லும் பக்கம் எல்லாம் பார்க்கும்.இது மிக விநோதமாக இருக்கும்.
அந்த கண்களின் மேல் ரைட் கிளிக் செய்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம்.


நான் சொல்வதை விடவும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள்.


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!