Saturday, December 10, 2016

ps இல் நீங்கள் உருவாக்கிய document ஒன்றுக்கு எப்படி watermark இடுவது?

word இல் watermark இடுவது பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் ps இல் எப்படி water mark இடுவது என்று தெரியுமா?

அதுபற்றி இன்று பார்ப்போம்.

முதலில் உங்கள் document ஐ உருவாக்குங்கள்.






பின்பு புது லேயர் ஒன்றை உருவாக்குங்கள்.

அந்த லேயரில் watermark இடவேண்டிய சொல்லை type பண்ணுங்கள்.






type பண்ணிய சொல்லை free transform செய்து (ctrl + t) கொள்ளுங்கள்.







விரும்பிய அளவுக்கு சரி செய்தபின் enter பண்ணுங்கள்.

பின்பு அந்த லேயரை விடயங்கள் type பண்ணிய லேயரின் கீழே கொண்டு வையுங்கள்.

இப்போது watermark லேயரை தெரிவு செய்து வலது கிளிக் பண்ணி blending option ஐ தெரிவு செய்து பின்வருமாறு செட் செய்யுங்கள்.











அவ்வளவுதான்.






பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, December 4, 2016

பிறந்த வருடத்தில் நடந்தது என்ன ?





நீங்கள் பிறந்த வருடத்தில் என்ன என்ன முக்கியமான விடயங்கள் நடந்திருக்கும்? என்று அறிய ஆவலா?

அப்படியானால் இந்த தளத்துக்கு செல்லுங்கள்.http://whathappenedinmybirthyear.com/  சென்று my birth year என்பதில்வ ருடத்தை கொடுத்து ? ஐ அமுக்கினால் போதும். அடுத்த கணமே அந்த வருடத்தில் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள் அப்போதுதான் type பண்ணுவதுபோல் காட்டப்படும்.

நாம்தான் எதுவும் சாதிக்கவில்லை பிறந்த வருடமாவது சாதிக்கப்பட்ட வருடமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் என் இனமே.
சென்று பாருங்கள்.


Monday, July 25, 2016

Wednesday, May 4, 2016

word 2007 இல் page background இல் page colour இல் செயற்படல் - புதியவர்களுக்காக

இன்று page background group இல் உள்ள page background பற்றி பார்ப்போம்.நாம் தயாரிக்கும் ஆவணத்துக்கு நிறத்தை கொடுக்க பயன்படும் இந்த பகுதியை கிளிக் செய்ததும் தோன்றும் theme colour என்பதில் விரும்பிய நிறத்தை தெரிவு செய்யலாம்.இதைவிட standard colour மூலமும் தெரிவு செய்யலாம்.




no colour என்பதை தெரிந்து colour ஐ இல்லாமல் செய்யலாம்.
இதைவிட more colour என்பதை தெரிந்து மேலதிகமான நிறத்தை தெரிவு செய்யலாம்.அதிலும் இருவகையான நிறங்கள் உள்ளன.விரும்பியதை தெரிவு செய்யலாம்.
custom என்பதில் RGB, HSL ஆகியன உள்ளன.மாற்றங்களை செய்து கொள்ளலாம்.




fill effects என்பதை தெரிவு செய்து gradient,texture,pattern,picture ஆகிய tab களை பயன்படுத்தி மேலும் effects களை பயன்படுத்தலாம்.


gradient என்பதில் பல்வேறு மாற்றங்களை செய்யலாம்.தனிக்கலராகவும் இரண்டு கலர்களை கலந்தும் நிறங்களை கொடுக்கலாம்.




texture உம் அதே போன்றுதான். picture உம் அவ்வாறே.படங்களை பாருங்கள்.




















நீங்களும் பயன்படுத்தி பார்த்தால் நன்கு புரியும்.

ஆகவே page colour ஊடாக ஆவணத்தை அழகாக்கி பயன்படுத்துங்கள்.

Wednesday, April 27, 2016

word 2007 இல் picture styles மூலம் செய்யக்கூடியவை

picture styles பகுதியில் ஏற்கனவே உள்ள preset மூலம் தெரிவு செய்த படத்தை மாற்றி அமைக்கலாம்.





அதுபோல் picture shape ஐ கிளிக் செய்து தேவையான மேலதிக வடிவங்களை உள்ளீடு செய்து உருவத்தை மாற்றி அமைக்கலாம்.







picture border என்பதில் border இன் நிறத்தை மாற்ற முடியும்.அதுபோல் border இன் பருமனையும் மாற்றிக்கொள்ள முடியும். weight என்பதூடாக இதை செய்யலாம்.









dashes மூலம் புள்ளிக்கோடுகள் உள்ள border ஆக மாற்றலாம்.








picture effect மூலம் தெரிவு செய்த படத்திற்கு ஏராளமான விளைவுகளை வழங்கலாம்.








எனவே இவ்வாறு நீங்களும் உங்கள் ஆவணத்தை அழகுபடுத்தி பாருங்கள். 

Tuesday, April 26, 2016

word 2007 insert tab மூலம் செய்யக்கூடியவை

இன்று word 2007 insert tab மூலம் செய்யக்கூடியவை எவை என சுருக்கமாக காண்போம்.அதாவது illustration group இலுள்ள picture பகுதியூடாக செய்யக்கூடியவை பற்றி பார்ப்போம்.





picture ஐ கிளிக் செய்து ஏதேனும் படத்தை கொண்டுவாருங்கள்.
பின் அப்படத்தை சுற்றிவரவுள்ள 8 புள்ளிகள் மூலம் பெரிதாக்கலாம்.அல்லது சிறிதாக்கலாம்.மேலே உள்ள பச்சை நிற புள்ளி மூலம் படத்தை திருப்பலாம்.




அதுபோல் படத்தின்மேல் ஒரு கிளிக் செய்ததும் format tab ஓபன் ஆகும்.அதன் மூலம் தேவையான அளவு படத்தை edit செய்யலாம்.
அதிலுள்ள adjust மூலமாக brightness ஐ 
மாற்றிக்கொள்ளலாம்.





contrast ஐ கூட்டி குறைக்கலாம்.




recolor மூலம் படத்தின் நிறத்தை மாற்றலாம்.





compress pic.மூலம் படத்தின் அளவை மாற்றலாம்.தோன்றும் விண்டோவில் options என்பதை கிளிக் செய்து அளவை மாற்றலாம்.


change என்பதை தெரிவு செய்து ஏற்கனவே தெரிவு செய்த படத்துக்கு பதிலாக வேறு படத்தை தெரிவு செய்யலாம்.


reset என்பது செய்யப்பட்ட மாற்றங்களை நீக்கி பழைய நிலைக்கு கொண்டு வருவதாகும்.


எனவே இவற்றையெல்லாம் பாவித்து படங்களை மாற்றி ஆவணத்தை மெருகூட்டலாம்.(picture styles பற்றி இன்னுமொரு பதிவில் காண்போம்.)

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Sunday, April 24, 2016

WORD 2007 இல் VIEW TAB இல் செய்யக்கூடியவை --புதியவர்களுக்கு மட்டும்

word இல் ஆவணங்களை தயாரித்து பயன்படுத்துகையில் பல tab களின் உதவியுடன் அவற்றை செம்மையாக்குவோம்.
அந்த வகையில் இன்று view tab இலுள்ள document views,show/hide,zoom ஆகியவை பற்றி பார்ப்போம்.
முதலில் உள்ள document views இல் print layout என்பது வழமையான பக்கமாகும்.




அடுத்துள்ள full screen reading என்பது முழுமையான பக்க பார்வையை கொடுக்கும் பகுதி.அதிலும் பல அம்சங்கள் உள்ளன.அடுத்த பக்கம் செல்ல ---> அம்புக்குறியும் முன் பக்கம் செல்ல <---- அம்புக்குறியும் உதவும்.மூட close ஐ கிளிக் பண்ணவும்.





web layout என்பது நாம் தயாரித்த ஆவணம் இணையப்பக்கமாக எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை காட்டும்.






outline view என்பது எல்லாப்பக்கங்களையும் ஒரே கோட்டில் வைத்து பார்க்க உதவும்.draft என்பதும் கிட்டத்தட்ட இதுபோன்றுதான்.












இனி show/hide இலே ruler ஐ தெரிவு செய்தால் ruler தென்படும்.grid line என்பதை தெரிவு செய்தால் பக்கம் முழுவதும் கோடுகள் தென்படும்.இதைக்கொண்டு சில செம்மைப்படுத்தல்களை செய்யலாம்.








thumbnail என்பது பக்கங்களை சிறு பார்வையாக தருவது.இதன் மூலம் நமக்கு தேவையான பக்கத்தை இலகுவாக பார்த்துக்கொள்ளலாம்.அதில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.





இனி zoom பகுதியில் zoom என்பதை தெரிவு செய்தால் ஒரு விண்டோ தோன்றும். அதில் மாற்றங்களை ஒரே பார்வையில் செய்து கொள்ளலாம்.100% என்பது உண்மையான அளவை காட்டும்.






இதேபோல் one page என்பதை தெரிவு செய்தால் பக்கங்கள் ஒவ்வொன்றாக காட்டப்படும்.two pages என்பதை தெரிவு செய்தால் பக்கங்கள் இரண்டிரண்டாக காட்டப்படும்.page width என்பது நல்ல அகலத்தில் -அதாவது 104% இல் காட்டப்படும்.











எனவே நீங்களும் இவற்றையெல்லாம் பயன்படுத்துங்கள். பயன் பெறுங்கள்.


Tuesday, January 19, 2016

word 2007 இல் bullet ஆக நாம் விரும்பிய picture ஒன்றை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் word இல் list க்கு bullet இடுகையில் default ஆக உள்ள bullet களையே இட்டிருப்பீர்கள்.

எனினும் நமக்கு விரும்பிய படங்களையும் bullet ஆக இடமுடியும்.அதுபற்றி இன்று பார்ப்போம்.

நீங்கள் தயாரித்த listஐ தெரிவு செய்துவிட்டு paragraph இலே உள்ள bullet இலே அம்புக்குறியை தெரிவு செய்து define new bullet என்பதை கிளிக் செய்யுங்கள்.





பின் தோன்றும் விண்டோவில் உள்ள picture பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள்.






தோன்றும் விண்டோவில் import பட்டனை கிளிக் செய்து உங்கள் கணனியிலுள்ள விரும்பிய படத்தை தெரிவு செய்யுங்கள்.(add)





இப்போது picture bullet இலே அப்படம் வந்துவிடும்.அதை தெரிவு செய்துவிட்டு ok பண்ணுங்கள்.




மீண்டும் ok பண்ணுங்கள். அவ்வளவுதான்.







பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Friday, January 15, 2016

தமிழ் நூல்களை தரும் தளங்கள்

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்......


இன்று நாம் இலவசமாக தமிழ் நூல்களை தருகின்ற சில தளங்களை பற்றி பார்ப்போம்.

கீழே முகவரிகளின் link கள் உள்ளன.அவற்றினூடாக சென்று தளங்களை காணுங்கள்.

சென்று நீங்களே முடிவு செய்யுங்கள்.அதனால் விரிவான விளக்கங்கள் தரவில்லை.ஒவ்வொரு தளங்களும் ஒவ்வொரு வகையில் வேறானவைதான்.














பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!