Saturday, April 30, 2011

இன்னுமொரு chrome extension .

இன்று நாம் chrome extension ஒன்று பற்றி பார்ப்போம்.இது picasa ,flickr ,facebook போன்ற தளங்களில் படங்களை பார்க்கும் வேளையில் அவற்றை slide show ஆக காட்டும்.
எவ்வாறு நிறுவுவது?
முதலில் https://chrome.google.com/extensions/list/popular/8?hl=en  சென்று படத்தில் காட்டியதுபோல் உள்ள icon ஐ கிளிக் பண்ணவும்.


பண்ணியதும் பின்வரும் விண்டோ தோன்றும்.


install என்பதை கிளிக் பண்ணியதும் உடனடியாகவே chrome bar இலே இன்ஸ்டால் ஆகும்.அதற்கான செய்தியும் தோன்றும்.

பின்னர் நீங்கள் picasa போன்ற தளங்களில் படங்களை பார்க்கும் வேளை இந்த icon பாரிலே தோன்றும்.


இந்த icon ஐ கிளிக் பண்ணினால் slideshow இலே படங்கள் காட்டப்படும்.கீழே உள்ளவாறு.............



நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.பயன்பெறுங்கள்.







Thursday, April 28, 2011

இன்னுமொரு utilities உங்களுக்காக

இது நம் கணணியை optimize பண்ணுவதற்கான utility .இதனை ஓபன் பண்ணியதும் தோன்றும் இடை முகத்திலே உள்ள home என்பதிலே மூன்று தெரிவுகள் உள்ளன.அதிலே தேவையானதை டிக் செய்துவிட்டு one click optimization என்பதை கிளிக் செய்தால் செயற்பாடு தொடங்கும்.


இதேபோன்று optimize என்பதை கிளிக் செய்து காணப்படும் நான்கு தெரிவுகளில் விரும்பியதை தெரிவு செய்து scan என்பதை கிளிக் செய்தால் ஸ்கேன் ஆரம்பமாகும்.

இது போலவே clean up ,repair என்பனவும்.




utilities என்பதை தெரிவு செய்தால் தோன்றும் தெரிவுகளில் நான்கு தெரிவுகள் உள்ளன தேவையானதை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.uninstall manager உம் உள்ளமை சிறப்பம்சமாகும்.


இதை விட option இலே கிளிக் செய்தும் பல செயற்பாடுகளை  மேற்கொள்ளலாம் .




இவ்வாறு பல பயனுள்ள அம்சங்கள் கொண்ட இந்த utility ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://www.download3k.com/Install-Acebyte-Utilities-Free.html  (இங்கு சென்று download link என்பதை கிளிக் செய்யுங்கள்.)



  



  

Saturday, April 23, 2011

விதம் விதமான போட்டோ effect களை பெற உதவும் தளம்.

நம் கணனியிலுள்ள போட்டோக்களை  விதம் விதமான effect களில் பார்க்க உதவும் தளம் பற்றி  இன்று பார்ப்போம்.

 இந்த தளம் சென்று அங்குள்ள விரும்பிய effect ஐ முதலில் தெரிவு செய்ய வேண்டும்.






பின்னர் upload your pic என்பதிலே choose file  என்பதிலே கிளிக் செய்து விரும்பிய படத்தை தெரிவு செய்து upload photo என்பதை கிளிக் செய்தால் போதும் வேலை முடிந்தது.உங்களது போட்டோ அழகாக காட்சி தரும்.




நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.



Thursday, April 21, 2011

கணணி பற்றிய டிப்ஸ் தரும் தளம்.

இன்றும் நாம் பார்ப்பது ஒரு பயனுள்ள தளம் பற்றிதான்.இது கணணி தொடர்பான பலகுறிப்புகளை பல்வேறு தலைப்புகளில் தருகிறது.


இப்பக்கம் சென்று முதல் பக்கத்திலே உள்ள categories என்பதிலே உங்களுக்கு எந்த விடயம் பற்றி குறிப்பு வேண்டுமோ அதன் தலைப்பை கிளிக் செய்து தகவல்களை பெறலாம்.உதாரணமாக windows tips என்பதிலே கிளிக் செய்தால் அங்கு 
போன்ற os களுக்குரிய டிப்ஸ் களை காணலாம்.
இதை விட முன் பக்கத்திலேயே பல தலைப்புக்கள் உள்ளன விரும்பிய தலைப்பை கிளிக் செய்து வேண்டிய தகவல்களை பெறலாம்.


நீங்களும் சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://www.computerfreetips.com/ 


Wednesday, April 20, 2011

கணணி பற்றிய tricks &tips வழங்கும் அருமையான தளம்.

நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களுக்கு விடை காணவும் பல்வேறு செயல்பாடுகளை கணணியிலே செய்வதற்கு உரிய டிப்ஸ் களை பெறவும் உதவும் தளம் பற்றி இன்று பார்ப்போம்.

உதாரணமாக கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இதிலே நமக்கு அவசியமான தகவலை தேடி பெற்றுக்கொள்ள முடியும்.எனவே நீங்களும் சென்று பாருங்கள்.பயன் பெறுங்கள்.

முகவரி : http://www.tricksystem.com/  
  

Tuesday, April 19, 2011

கணணி நூல்களை இலவசமாக பெற உதவும் தளம்.

இன்று நாம் ஒரு ebook தளம் பற்றி பார்ப்போம்.இங்கே நமக்கு தேவையான கணணி e book களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மிகவும் பெறுமதி வாய்ந்த கணணி நூல்கள் இங்கே கிடைக்கின்றன.


ஆங்கிலத்தில்தான்  உள்ளன. நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.


Sunday, April 17, 2011

கணனியின் வரலாறை அறிய உதவும் தளம்.

கணணி எவ்வாறு உருவானது என்பதை அறிய விருப்பமா?அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது.ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கணணி உருவான விதத்தை படங்களுடன் விளக்குகிறது இந்த தளம்.


கணணி பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டுமல்ல மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளது.நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.



(15.4.2011 அன்றைய பதிவிலே முகவரியை கொடுக்க மறந்துவிட்டேன்.இதோ அதன் முகவரி. : http://www.4shared.com/get/5tUo-Okp/Free_Desktop_Clock_v22.html  )

Friday, April 15, 2011

இலவச டெஸ்க்டாப் க்ளோக்

இன்று நாம் பார்க்க போவது ஒரு சிஸ்டம் திரை க்ளோக் பற்றி.இதை இன்ஸ்டால் செய்ததும் உடனடியாகவே சிஸ்டம் க்ளோக் இலே அமர்ந்து கொள்ளும்.


இதிலே மௌஸ் ஐ வைத்து வலது கிளிக் செய்ததும் தோன்றும் மெனுவில் main dialog என்பதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோ இல் option என்பதை கிளிக் செய்து வேண்டிய செட்டிங் களை செய்து கொள்ளலாம்.



அதே போன்று select skin என்பதை தெரிவு செய்து விரும்பிய ஸ்கின் களை தெரிவு செய்யலாம்.



வலது கிளிக் செய்ததில் தோன்றும் மெனுவில் உள்ள random skin என்பதை கிளிக் செய்தும் ஸ்கின் களை மாற்றலாம்.
இது போன்று மேலும் பல வசதிகளை கொண்ட இந்த க்ளோக் ஐ பயன்படுத்தி பாருங்கள்.பயன் பெறுங்கள்.





Wednesday, April 13, 2011

வேர்ட் கற்க பயனுள்ள தளம்.

ms word 2007 பற்றி அறிந்து கொள்ள மிக அருமையான ஒரு தளம் இது.ms word மட்டுமல்ல exel ,photoshop ,powerpoint போன்ற ஏனைய ப்ரோக்ராம் களையும் இந்த தளத்திலே கற்கலாம்.








படங்களின் உதவியுடன் மிகவும் இலகுவாக விளங்கும் வகையில் விளக்கப்படுகின்றன.எனவே அடிப்படையிலிருந்து கற்கலாம்.




  அத்துடன் நமக்கு விரும்பிய தலைப்பை தெரிவு செய்தும் படிக்கலாம்.

இது போன்ற இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த தளத்துக்கு நீங்களும் சென்று பாருங்கள்.பயன் பெறுங்கள்.

                                             முகவரி : http://www.baycongroup.com  

Monday, April 11, 2011

கணணி பற்றி அறிய உதவும் தளம்

இன்றும் நாம் ஒரு பயனுள்ள தளம் பற்றி பார்ப்போம்.இது கணணி பற்றி அறிய உதவும் ஒரு தளம்.இங்கே windows xp,7,vista போன்ற os பற்றியும் இன்டர்நெட் பற்றியும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் கற்கலாம்.அறியலாம்.

உதாரணமாக விண்டோஸ் xp பற்றிய ஒரு விடயம்.safe mode ஐ எவ்வாறு பெறுவது என விளக்கப்பட்டுள்ளதை பாருங்கள்.


இதே போன்று customizing the taskbar என்ற பகுதியை பாருங்கள்.


விண்டோஸ் xp பற்றி அடிப்படையிலிருந்து கற்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளம் என்பது எனது கருத்து.
சென்று பாருங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி : http://vlaurie.com/  


Sunday, April 10, 2011

போடோஷப் கற்க பயனுள்ள இணையத்தளம்

 இன்று நாம் பயனுள்ள ஒரு இணையத்தளம் பற்றி பார்ப்போம்.அடிப்படையிலிருந்து போடோஷோப் கற்க எனக்கு மட்டுமல்ல என்னைப்போல் உள்ள அன்பர்களுக்கும் ஆசை இருக்கும்.அவ்வாறானவர்களுக்கு உதவுவது இந்த இணையத்தளம்.

இங்கு பட விளக்கங்களுடன் போடோஷோப் பற்றி அடிப்படையிலிருந்து விளக்கப்படுகிறது.ஓரளவு ஆங்கிலம் புரியக்கூடியவர்களுக்கும் நன்றாக விளங்கும் என்பது என் எண்ணம்.
இங்கு நமக்கு எந்த பகுதி பற்றி விளக்கம் வேண்டுமோ அதனை தெரிவு செய்யலாம்.


உதாரணமாக நான் தெரிவு செய்த ஒரு பகுதி இங்கே 



படங்களுடன் விளக்கமாக உள்ளதால் இலகுவாக விளங்குகிறது.நான் சொல்வதை விடவும் நீங்கள் சென்று பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கும்.(அதற்காக நான் ஒன்றும் போடோஷோப் வல்லவன் அல்ல.அடிப்படையிலிருந்து கற்றுவருகிறேன்.)
தளம் சென்று பாருங்கள்.பயன் பெறுங்கள். 

முகவரி : http://www.basicphotoshop.com/basicps.htm           

Monday, April 4, 2011

ரெஜிஸ்ட்ரிஐ சிறப்பாக செயல்பட வைக்கும் -REGISTRY LIFE

     இன்று நாம் பார்க்க போவது REGISTRY LIFE பற்றி.மிக சிறந்த மென்பொருள்.எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.
முதலில் http://www.chemtable.com/RegistryLife.htm  எனும் முகவரி  சென்று தரவிறக்கவும்.நிறுவி ஓபன் பண்ணியதும் பின்வரும் இடைமுகம் தோன்றும்.


அதிலே REGISTRY CLEAN UP என்பதை கிளிக் பண்ணியதும் பின்வரும் இடைமுகம் தோன்றும்.


START என்பதை கிளிக் செய்ததும் CLEAN ஆரம்பமாகும்.அதன் பின் பின்வரும் இடைமுகம் தோன்றும்.அதிலே FIX என்பதை கிளிக் பண்ணியதும் ERROR அழிக்கப்படும்.

அடுத்த தெரிவு REGISTRY OPTIMIZATION.



அதிலே REGISTRY OPTIMIZATION என்பதை கிளிக் பண்ணியதும் OPTIMIZATION ஆரம்பமாகி பின்வரும் செய்தி தோன்றும்.


CLOSE பண்ணியதும் சிஸ்டம் REBOOT ஆகும்.REGISTRY LIFE ஐ செயற்படுத்தும் முன் அனைத்து ப்ரோக்ராம் களையும் CLOSE பண்ண வேண்டும்.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

    

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!