Tuesday, March 29, 2011

பயனுள்ள extension

இன்னுமொரு chrome extension பற்றி பார்ப்போம்.இதன் பெயர் fast youtube search .மிக விரைவாக youtube இலே தேட உதவுகிறது.முதலில் இங்கு சென்று நிறுவவும்.https://chrome.google.com/extensions/list/popular/5?hl=en 




 பின்னர் ப்ரௌசெர் இலே பின்வரும் icon தோன்றும்.

அதை கிளிக் செய்ததும் பின்வரும் சர்ச்பாக்ஸ் தோன்றும்.


அதிலே நாம் தேட விரும்பும் வீடியோ வை type செய்து கிளிக் செய்ததும் youtube பக்கம் உடனடியாக திறக்கும்.


மிகவும் பயனுள்ள ஒரு extension .பயன்படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.



Wednesday, March 23, 2011

வன்தட்டை பகுப்பாய்வு செய்யும் xinorbis

 இது ஒரு பயனுள்ள டூல் வன்தட்டின் பல்வேறு தகவல்களையும் விரைவாகவும் இலகுவாக விளங்கிக்கொள்ள கூடிய  வகையிலும் தருகிறது.எவ்வளவு பாவிக்கப்படுள்ளது,எவ்வளவு space உள்ளது போன்ற தகவல்களையும் பைல்,போல்டர் பற்றிய தகவல்களையும் எழுத்து வடிவிலும் பட வரைபுகளிலும் தருகிறது.


ஓபன் பண்ணியதும் தோன்றும் இடைமுகத்திலே scan drive or folder என்பதை கிளிக் செய்து விரும்பிய drive /folder ஐ ஸ்கேன் பண்ண வேண்டும்.பின்னர் welcome என்பதிலுள்ள folder history என்பதை கிளிக் செய்தவுடன் ஸ்கேன் செய்யப்பட்ட டிரைவ் அல்லது folder பற்றிய தகவல்கள் படம்/chat வடிவில் தரப்படும்.


task என்பதை கிளிக் செய்ததும் தோன்றும் summary என்பதை கிளிக் செய்தால் நாம் தெரிவு செய்த டிரைவ் இன் தகவல்கள் காட்டப்படும்.


இதே போன்று மற்றைய பகுதிகளையும் கிளிக் செய்து தகவல்களை பட வரைபுகள் மற்றும்  text வடிவங்களில் பெறலாம்.






நீங்கள் பயன்படுத்தும்போது இதன் இன்னும் பல வசதிகள் பற்றி அறிவீர்கள்
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்..

முகவரி :  http://www.freshney.org/downloads.htm  

Monday, March 21, 2011

பயனுள்ள chrome tv

இதுவும் ஒரு extension தான்.இதன் மூலம் பல டிவி சேனல் களையும் நாடு வாரியாகவும் category வாரியாகவும் பார்க்கலாம்.முதலில்  https://chrome.google.com/extensions/detail/lambangeielkjcnmioccboaphdfcffib?hl=en எனும் முகவரியில் சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

                                                                         

உடனே chrome இலே பின்வரும் icon தோன்றும்.


அதை கிளிக் பண்ணியதும் பின்வரும் டிவி போன்ற உரு தோன்றும்.


அதை கிளிக் பண்ணியதும் பின்வரும் உரு தோன்றும்.


அதிலே உங்களுக்கு விருப்பமானதை கிளிக் செய்து பார்க்கலாம்.இதை விட நாடு வாரியாக தெரிவு செய்வதெனில் by country என்பதை கிளிக் செய்து விரும்பிய கண்டத்தை தெரிவு செய்து பின் நாட்டை தெரிவு செய்யலாம்.




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

                                                          


                                                                                   

Sunday, March 20, 2011

கிளிக்&கிளீன் - click&clean

இதுவும் ஒரு chrome extension தான்.முதலில் https://chrome.google.com/extensions/search?itemlang=&hl=en&q=click%26clean சென்று கீழே உள்ளவாறு கிளிக் செய்து கொள்ளவும்.


கிளிக் செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.


install என்பதை கிளிக் செய்ததும் பின்வரும் விண்டோ தோன்றும்.



install என்பதை கிளிக் செய்ததும் ப்ரௌசெர் இலே செட்டிங் பட்டன் அருகிலே படத்திலுள்ளதுபோல் சிறு icon தோன்றும்.


அந்த icon ஐ கிளிக் செய்ததும் பல option கள் காணப்படும்.அவற்றை கொண்டு நீங்கள் கணணியை clean செய்யலாம்.


மிகவும் பயனுள்ள ஒரு extension என்பது எனது கருத்து.
பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.




                                                                           

Saturday, March 19, 2011

முகநூல் புகைப்பட பெருக்கி --FACEBOOK PHOTO ZOOM

இது ஒரு CHROME EXTENSION ஆகும்.இது என்ன செய்கிறது?இதை இன்ஸ்டால் செய்துவிட்டு FACEBOOK இலே சென்று அங்குள்ள புகைப்படங்கள் மீது கர்சரை கொண்டு சென்றால் அவை பெரிதாக (ZOOM ) தென்படும்.அவ்வளவுதான்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?
முதலில் https://chrome.google.com/extensions/list/popular?hl=en எனும் முகவரி சென்று படத்தில் காட்டப்பட்ட இடத்தை கிளிக்செய்யுங்கள்.


பின்னர் பின்வரும் படம் தோன்றும் அதிலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.


மீண்டும்  தோன்றும் விண்டோ இலே இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யவும்.உடனே பின்வரும் செய்தி தோன்றும் அதிலே LIKE &FOLLOW என்பதை கிளிக் செய்தவுடன் நிறுவப்பட்டமைக்கு அடையாளமாக பிரௌசெர் இலே பின்வரும் செய்தி தோன்றும்.


இனி FACEBOOK இலே சென்று விரும்பிய படத்தின்மேல் கர்சரை கொண்டு     சென்றதும் அது ஜூம் பண்ணி காட்டப்படும். 

பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள். 
   

                                                                                    

Friday, March 18, 2011

சிம்நெட் ---simnet uninstaller

 இன்று நாம் பார்ப்பது simnet uninstaller எனும் ஒரு சிறந்த மென்பொருள் பற்றி. கொன்றோல் பனல் சென்று தேவையில்லாத ப்ரோக்ராம் களை uninstall செய்ய முடியும் என்றாலும் சிலவேளைகளில் அழிக்கமுடியாமல் போவதுண்டு.அதுமட்டுமன்றி எல்லா பைல்களும் அழிக்கபடுவதுமில்லை.ஆனால் சிம்நெட் அவ்வாறல்ல.ப்ரோக்ராம் சம்பந்தமான எல்லா என்ட்ரி களையும் அழிக்கிறது.
வெறும் 650kb கொள்ளளவுடைய இதை செயற்படுத்துவது மிகமிக இலகு.ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோ இல் 



 manage program என்பதை கிளிக் செய்தால் நம் கணனியிலுள்ள எல்லா ப்ரொக்ராம்களும் காட்டப்படும் அதிலே அழிக்க வேண்டியதை தெரிவு செய்து uninstall என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


உடனே பின்வரும் wizard தோன்றும். 


ஒவ்வொன்றாக தோன்றும் விண்டோகளின் இறுதியில் பின்வரும் wizard தோன்றும் finish கிளிக் செய்தால் எல்லாம் முடிந்தது.




                        (அதிலேயே registry repair ,disk cleaner ஆகியனவும் உள்ளன.) பயன் படுத்துங்கள்.பயன் பெறுங்கள்.
                    
                முகவரி :: www.download3k.com/System.../Download-Simnet-UnInstaller-2010.html 

Thursday, March 17, 2011

இலகு புகைப்பட தரவேற்றுவோன்

இலகு  புகைப்பட  தரவேற்றுவோன் என்றால் என்ன என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்.easy photo uploader என்பதன் தமிழ் வடிவம்தான் இது.இது என்ன செய்கிறது?facebook இல் நமது கணக்கிலே படங்களை தரவேற்ற உதவுகிறது.facebook இலே இந்த வசதி இருந்தாலும் அதன் மூலம் படங்களை தரவேற்றும்போது அதிக நேரம் எடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.எனினும் இதன்மூலம் மிக விரைவாக தரவேற்றலாம்.

எவ்வாறு தரவேற்றுவது?

பின்வரும் வழிமுறைகளை படங்களின் துணையுடன் செய்யுங்கள்.
முதலில் இதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் எந்த படத்தை upload செய்ய வேண்டுமோ அதன்மீது வலது கிளிக் செய்து வரும் மெனுவில் உள்ள send your photos to facebook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும். 


அதிலே connect என்பதை கிளிக் செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.


அதை பூர்த்தி செய்தவுடன் பின்வரும் விண்டோ தோன்றும்.


இது தோன்றி சிறிது நேரத்தில் பின்வரும் விண்டோ தோன்றும்.




அதிலே நமது profile picture இன் மீது கிளிக் செய்ய வேண்டும்.உடனே பின்வரும் விண்டோ தோன்றும்.


அதிலே நாம் தெரிவு செய்த படம் காணப்படுவதுடன் upload ஆகும்.பின்னர் upload ஆனதற்கான அறிகுறியாக பின்வரும் விண்டோ தோன்றும்.


இனி facebook இலே சென்று பார்த்தால் நீங்கள் தரவேற்றிய படம் காணப்படும்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.







Wednesday, March 16, 2011

CLOCX -குலொக்ஸ்

    இன்று நாம் பார்க்கப்போவது ஒரு டெஸ்க்டாப் கடிகாரம் பற்றி.இதன் பெயர் CLOCX .941KB அளவுடைய இது கணணி பயனாளர்களாகிய எமக்கு மிகவும் சிறந்தது.ஏனெனில் சில கடிகாரங்கள் எப்பொழுதும் டெஸ்க்டாப் இல் மட்டுமே தென்படும் ஏனைய விண்டோகளை திறந்தவுடன் மறைந்துவிடும்.ஆனால் இது அப்படியல்ல எல்லா இடமும் தென்படும்.


இதை நிறுவியவுடன் தோன்றும் கடிகார முகத்திலே வலது கிளிக் செயதால் தோன்றும் மெனுவில் OPTION என்பதை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் பல வசதிகள் உள்ளன.GENERAL TAB இலே TRANPARENCY ஐ கூட்டி குறைக்கலாம். அதுபோல் விண்டோ OPTION இலே உம் பல வசதிகள் உள்ளன.



APPEARANCE என்பதிலே கடிகாரத்தின் வடிவங்களை நமது ரசனைக்கு ஏற்ப மாற்றலாம்.PRESET OPTION என்பதிலே AM ,PM ,திகதி போன்றவற்றை செட் செய்யலாம்.கடிகாரத்தை நமது விருப்பம்போல் ஜூம் பண்ணக்கூடிய வசதியும் உள்ளது.



கடிகாரத்தின் மேல் வலது கிளிக் செய்து வரும் மெனுவில் ALARM என்பதை கிளிக் செயதால் தோன்றும் விண்டோ இல் ALARM செட் செய்யலாம்.நாம் விரும்பிய ஒலியையும் ALARM ஒலிக்கும்போது ஒலிக்கும்படி செய்யலாம்.எத்தனை செகண்ட் களுக்கு ஒலிக்க வேண்டும் என்பதையும் செட் செய்யலாம்.


கடிகாரத்தில் வலது கிளிக் செய்து வரும் மெனுவில் CALENDER என்பதிலே அன்றைய நாளை மட்டுமல்ல முந்தய வருடங்களையும் பார்க்க முடியும்.


இவ்வாறு இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த கடிகாரத்தை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் பயன் பெறுங்கள். நிச்சயமாக இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனது எனது எண்ணம்.

  
         

Tuesday, March 15, 2011

சூப்பர் mp3 downloader

இன்று நாம் பார்க்கப்போவது super mp3 downloader பற்றி. இது என்ன செய்கிறது?
online இல் mp3 பாடல்கள்,ஜோக்குகள்,பட வசனங்கள் போன்றவற்றை டவுன்லோட் பண்ண முடியும்-கேட்க முடியும்.


mp3 search என்பதிலே search box இலே தேடும் சொற்களை உள்ளீடு செய்து தேடலாம்.நபர்,தலைப்பு,அல்பம் என்ற எதுவானாலும் கொடுத்து தேடலாம்.advance search என்பதிலும் பல option கள் உள்ளன.


அது போன்று hot songs என்பதிலே பல பாடல்கள் காணப்படுகின்றன.


மேலும் categories என்பதிலே pop , blues போன்ற பாடல் வகைகளை தெரிவு செய்யலாம்.


எவ்வாறு செயற்படுத்துவது? முதலில் சொல்லை உள்ளீடு செய்து தேடியபின் வரும் list இலே தேவையானதை தெரிவு செய்து play பட்டனை அழுத்தியதும் play ஆகும்.உதாரணமாக தமிழ் என்று டைப் செய்து தேடினால் பல mp3 file கள் ஓபன் ஆகும் அதிலே தேவையானதை தெரிவு செய்து கேட்கலாம்.
பயன் படுத்துங்கள் பயன் பெறுங்கள்.

முகவரி : http://www.super-mp3-download.com/  




Sunday, March 13, 2011

கண் மீது அக்கறை உள்ள EYES RELAX

நீங்கள்  கணணியை தொடர்ச்சியாக பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் அவசியம்.இது அப்படி என்னதான் செய்கிறது? நமது கண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கசொல்லி ஞாபகம் ஊட்டுகிறது அவ்வளவுதான்.


இதை எவ்வாறு செயற்படுத்துவது? முதலில் BREAKS எனும் டப் இலே எத்தனை நிமிடத்தின் பின் ஓய்வு தேவை என்பதை குறிப்பிட வேண்டும்.பின் மீண்டும் எத்தனை செகனில் தொடங்கவேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்டவுடன் கீழே COUNDOWN ஆரம்பமாகும்.நாம் குறிப்பிட்ட நிமிடம் முடிந்ததும் ஒலியுடன் கூடிய பின்வரும் மெனு தோன்றும்.


பிரேக் டைம் முடிந்ததும் பின்வரும் மெனு SYSTEM TRAY இலே தோன்றும்.


அதன் பின் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதன் பணி தொடரும்.

இவ்வாறு மேலும் பல சிறப்புக்கள் கொண்டது மட்டுமல்ல சிறிய கொள்ளளவும் உடைய இதனை நிறுவாமலே சிப் பைலாக பயன்படுத்தலாம்.பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி :   http://themech.net/eyesrelax/   



   

Saturday, March 12, 2011

கோப்பு மீட்பான் - file recovery

சில வேளை நாம் தவறுதலாக பைல்களை முழுமையாக  அழித்துவிடுவோம்.பின்னர் அதை எவ்வாறு எடுப்பது என தலையை சொறிந்து பலனில்லை. அதற்காகவே இருக்கிறது file recovery.


எவ்வாறு மீட்டெடுப்பது?  முதலில் டிரைவ் என்பதில் எந்த டிரைவ் என தெரிவு செய்ய வேண்டும்.


பின்னர் scan ஐ கிளிக் செய்தவுடன் அழிக்கப்பட்ட எல்லா பைல் களும் காட்டப்படும்.அதிலே நமக்கு தேவையான பைல் ஐ தெரிவு செய்து -டிக் செய்து-edit menu வில் சென்று recover selected files என்பதை தெரிவு செய்ய வேண்டும்.அல்லது f12 ஐ அழுத்த வேண்டும்.படத்தை பாருங்கள்.


இனி என்ன அழித்த பைல் மீண்டும் கிடைத்துவிடும்.பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


    

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!