பொதுவாக நாம் பயன்படுத்தும் ஐகன்கள் அந்த ப்ரோக்ராமை உருவாக்குபவர்கள் தரும் ஐகன்களாகவே இருக்கும். இல்லாவிட்டால் அந்த ஐகன் மீது வலது கிளிக் செய்து properties சென்று மாற்றுவோம்.ஆனால் நாம் விரும்பிய படத்தை ஐகனாக மாற்றினால்.....அதற்காகவே உள்ளது easy picture 2 icon.
இந்த மென்பொருள் மூலம் நம் கணனியிலுள்ள படங்களை ஐகன்களாக மாற்றி சோர்ட் கட் ஆக வைத்துக்கொள்ளலாம்.
எவ்வாறு மாற்றுவது?
முதலில் இடைமுகத்தை திறந்துகொண்டு open picture என்பதை கிளிக் செய்து விரும்பிய படத்தை திறந்து கொள்ள வேண்டும்.
பின்னர் icon sizes to include என்பதிலே விரும்பிய அளவை தெரிவு செய்ய வேண்டும்.உதாரணம் 32 *32 .transparent color என்பதை டிக் செய்தால் படம் கலர் இல்லாமல் வரும்.பின்னர் save icon என்பதை கிளிக் செய்து படத்தை சேமிக்க வேண்டும்.
இனி எந்த சோர்ட் கட் இன் icon ஐ மாற்ற வேண்டுமோ அதன் மீது வலது கிளிக் செய்து properties ----customize ------change icon சென்று browse சென்று நீங்கள் உருவாக்கிய icon ஐ தெரிவு செய்து ok கொடுத்து apply செய்ய வேண்டியதுதான்.
No comments:
Post a Comment