Sunday, February 3, 2013

கணணி தோற்றத்தை அழகுபடுத்தல்

இன்று நாம் நம் கணனியின் சில  பகுதிகளை அழகுபடுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்.

"எத்தனை நாளைக்குத்தான் ஒரே முகத்தை பார்த்துக்கொண்டிருப்பது " என்று சொல்வதுபோல் எத்தனை நாளைக்குத்தான் ஒரே விண்டோக்களையும் பொண்ட் களையும் பார்ப்பது?

அதனால் அவற்றை எப்படி மாற்றி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

பலருக்கு இது தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் desktop இலே வலது கிளிக் பண்ணி properties என்பதை தெரிவு செய்க.

 பின்னர் தோன்றும் display properties என்பதிலே appearance என்பதை கிளிக் செய்யவும்.

அதிலே மாற்றக்கூடிய மூன்று விடயங்கள் உள்ளன.அதாவது windows &buttons ,color scheme ,font size போன்றவை.அதில் விரும்பியதை மாற்றலாம்.படத்தை பாருங்கள்










பின்னர் advanced என்கிற பொத்தானை கிளிக் பண்ணினால் வருகின்ற dialog box இலே பல மாற்றங்கள் செய்யலாம்.




அதிலே item என்பதை கிளிக் பண்ணினால் பல தெரிவுகள் காணப்படும் அவற்றிலும் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.படத்தை பாருங்கள்.




item என்பதில் எதாவது ஒரு section ஐ தெரிவு செய்து அருகிலுள்ள color ,size போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம்.

உதாரணமாக icon என்பதை தெரிவு செய்தால் அதன் அருகிலுள்ள size ,font  ஆகியவற்றை தெரிவு செய்யலாம்.




  இவ்வாறு பல மாற்றங்கள் செய்து அழகுபடுத்தி மகிழுங்கள்.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.










No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!