Sunday, February 1, 2015

இழந்த எல்லாவற்றையும் பெறலாம்...recuva

வாழ்க்கையில் இழந்தவைகளை  பெறுகிறோமோ இல்லையோ..வாங்கிய கணனியில் இழந்தவைகளை பெறலாம்.

அதாவது தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ அழிக்கப்பட்ட பைல்களை -அவை எந்தவகை பைல்கள் என்றாலும்-மீளப்பெற உதவும் பல்வேறுவகை மென்பொருள்களில் recuva வும் ஒன்று .என்னைப்பொறுத்தவரை அது மிக நன்று.




நம் எல்லோர் அபிமானத்தையும் பெற்ற piriform தயாரிப்பான இதை நம்பி பயன்படுத்தலாம்.32 மற்றும் 64 bit களில் இயங்கும் வல்லமை கொண்ட இரு exe file களை இங்கு மற்றும் இங்கு சென்று பதிவிறக்குங்கள்.



இது ஒரு portable பதிப்பு என்பதால் நிறுவ தேவையில்லை.நேரடியாக run செய்தோ extract செய்தோ ஓபன் பண்ணலாம்.



தோன்றும் முதலாவது விண்டோவில் next கொடுத்ததும் அடுத்த விண்டோவில் எந்தவகை பைலை தேட வேண்டும் என்று கொடுக்கவும்.அடுத்த விண்டோவில் பைல் location தெரியும் என்றால் கொடுக்கலாம்.இல்லாவிட்டால் im not sure என்பதை தெரியலாம்.
next கொடுத்ததும் அடுத்த விண்டோவில் enable deep scan என்பதை கொடுத்தால் மிக ஆழமாக தேடி முடிவுகளை கொடுக்கும்.இதற்கு அதிக நேரம் எடுக்கும்.









start அழுத்தியதும் தேடல் தொடங்கும்.முடிவுகளில் தேவையான file மீது சரி அடையாளத்தை கொடுத்து directory யையும் கொடுக்க வேண்டும்.option விண்டோவை கிளிக் செய்து மேலதிக தெரிவுகளை செய்யலாம்.








பின் recover என்பதை கிளிக்கினால் பைல் மீண்டும் கிடைக்கும்.

பயன்படுத்துகையில் மேலதிக வசதிகளை அறியலாம்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!