Tuesday, February 24, 2015

அது என்ன android என்றால்?

இந்த பதிவு android பற்றிய சிறு விளக்கமாக அமைகிறது.




கணனிகளுக்கு os உள்ளதுபோன்றே ஸ்மார்ட் போன்களுக்கும் os உள்ளது.
அந்தவகையில் போன்களுக்கான os களாக ios,android,windows,symbian,blackberry,bada,palm,openwebos போன்றவைகளை குறிப்பிடலாம்.


இவைகளில் எல்லோராலும் விரும்பி பயன்படுத்தும் os வகையாக android விளங்குகின்றது என்றால் மிகையல்ல.


google நிறுவன தயாரிப்பான android ஸ்மாட்போன்கள்,tab களில் பயன்படுத்தப்படுகின்றது.


google தயாரிப்பு என்பதால் அதன் ஏனைய தயாரிப்புக்களுடனும் ஒத்திசைவாக இயங்க கூடியது.(gmail,youtube,maps)

இந்த android os ஐ motorola,HTC,sony,ZTE,samsung,acer,alcatel,asus,huawei,LG ஆகியவை பயன்படுத்துகின்றன.
குறிப்பு: ios என்பது apple இன் அதாவது iphone இன் os ஆகும்.


android os 2008 ஆம் ஆண்டு அறிமுகமானது.இதுவரை 12 பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.(versions) அவை ஆங்கில அகர வரிசையில் அமைந்துள்ளன.அவையாவன:


cup cake,donut,eclair,froyo,gingerbread,honeycomb,ice cream sandwitch,jellybean (3),kitkat,lollipop.





android update களை இலவசமாக பெறலாம் என்பது தெரியாததல்ல.
android ஐ செயற்படுத்த ஆணிவேராக அமையும் apps களை google play ஊடாக பெறலாம்.சுமார் 1.3 மில்லியன் apps கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன.





















Sunday, February 15, 2015

உலக கிண்ண கிரிக்கட் app

நேற்று உலக கிண்ண கிரிக்கட் ஆரம்பமாகி இலங்கையணி மரண அடி வாங்கியது அனைவருக்கும் தெரியும்.

நான் சொல்ல வருவது இந்த 2015 ஆம் உலக கிண்ண கிரிக்கட் பற்றிய நேரடி ஸ்கோர் களை தருகின்ற ஒரு android app பற்றி.





தொடரறா நிலையில் செயற்படும் இவ் app மூலம் பல தகவல்களை பெறலாம்.

முதலில் தோன்றும் பக்கத்தில் fixture என்பதனூடாக எந்த எந்த நாடுகளுக்கிடையில் எங்கு எப்போது போட்டிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் தரப்படுகின்றது.








அடுத்து team என்பதில்  குழு A,B ஆகியவற்றில் உள்ள அணிகள் பற்றியும் வீரர்களின் விபரங்களும் அக்குவேறு ஆணி வேறாக தரப்பட்டுள்ளன.




cwc என்பதில் இதுவரை உலக கிண்ணத்தை வென்ற அணிகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.




notification ஐ on பண்ணி வைத்தால் 4,6 out போன்றவை காட்டப்படும்.

இவ்வாறு பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த app ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


app ஐ பெற இங்கு செல்க.

இது எல்லாவற்றையும் விட சிறந்த வழி என் தளத்திலேயே கிரிக்கட் நிலவரம் உள்ளது.என்தளத்தை உங்கள் போனில் ஓபன் பண்ணினாலும் விபரங்களை காணலாம் ;அறியலாம்.







Monday, February 9, 2015

உங்களது முகநூல் கணக்கை hackers களிடம் இருந்து பாதுகாப்பது எப்படி?

இன்று நாம் நம் முகநூல் கணக்கை hackers களிடம் இருந்து எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.(பொதுவானவை)










1. உங்கள் கடவுச்சொல்லை எக்காரணம் கொண்டும் பிறரிடம் பகிராதீர்கள்.பயன்படுத்தும் கணணி வெளிக்கணணி எனில் sign out செய்தபின் வெளியேறுங்கள்.



2. சந்தேகத்துக்குரிய news feed களை எடுக்காதீர்கள்.








3. உங்களுக்கு நன்கு தெரிந்த ,நம்பிக்கையான friend request ஐ மட்டும் accept பண்ணுங்கள்.











4. அடிக்கடி ஆளை மாத்தும் சில காதலர்களைப்போல் கடவுச்சொல்லையும் மாற்றுங்கள்.  setting---->general----->password














5. சிறந்த antivirus மென்பொருளை பயன்படுத்துங்கள்.







6. தனிப்பட்ட விபரங்களை பகிர்வதை தவிருங்கள்.




7. தேவைப்பட்டால் யார் யார் உங்கள் profile ஐ பார்க்கலாம் என்பதையும் மாற்றுங்கள்.





8. security setting இலே email ஐயும் text messages ஐயும் active பண்ணுங்கள்.












இவ்வளவு வேலைகள் செய்தும் உங்கள் கணக்கு hack செய்யப்பட்டால் பாராட்டுங்கள் அந்த hacker ஐ. திறமைசாலிகளை பாராட்ட வேண்டியது நமது கடமை.

Sunday, February 8, 2015

youtube மட்டும்தானா?

நம்மில் சிலர் எதற்கு எடுத்தாலும் youtube youtube என்று ஓடுவதை பார்க்கின்றோம்.

youtube முன்னணி வீடியோ பகிர் தளம் என்பதில் சந்தேகம் இல்லை.

youtube ஐ போல்  எத்தனையோ சிறந்த வீடியோ தளங்கள் இருக்கின்றன.

அவற்றை இங்கு தருகின்றேன்.

சென்று பார்த்து முடிவு செய்யுங்கள்.
 Vimeo   













Monday, February 2, 2015

போன்களுக்குரிய சில ringtone கள் மற்றும் zip folder உருவாக்குதல்.

இன்று நானே create செய்த 10 ringtone களை இங்கே தருகின்றேன்.

பிடித்திருந்தால் பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.

இங்கு செல்க.



அடுத்து windows 8 இலே zip folder ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

zip folder  ஆக்கவேண்டிய பைல்களை  முதலில் ஒரு folder இல் இட்டு desktop இல் save பண்ணிக்கொள்ளவும்.

பின்னர் அதை right கிளிக் செய்து தோன்றும் மெனுவில் send to விலே உள்ள compressed (zipped) folder என்பதை select செய்து ok பண்ணவும்.





அவ்வளவுதான்........




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


Sunday, February 1, 2015

இழந்த எல்லாவற்றையும் பெறலாம்...recuva

வாழ்க்கையில் இழந்தவைகளை  பெறுகிறோமோ இல்லையோ..வாங்கிய கணனியில் இழந்தவைகளை பெறலாம்.

அதாவது தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ அழிக்கப்பட்ட பைல்களை -அவை எந்தவகை பைல்கள் என்றாலும்-மீளப்பெற உதவும் பல்வேறுவகை மென்பொருள்களில் recuva வும் ஒன்று .என்னைப்பொறுத்தவரை அது மிக நன்று.




நம் எல்லோர் அபிமானத்தையும் பெற்ற piriform தயாரிப்பான இதை நம்பி பயன்படுத்தலாம்.32 மற்றும் 64 bit களில் இயங்கும் வல்லமை கொண்ட இரு exe file களை இங்கு மற்றும் இங்கு சென்று பதிவிறக்குங்கள்.



இது ஒரு portable பதிப்பு என்பதால் நிறுவ தேவையில்லை.நேரடியாக run செய்தோ extract செய்தோ ஓபன் பண்ணலாம்.



தோன்றும் முதலாவது விண்டோவில் next கொடுத்ததும் அடுத்த விண்டோவில் எந்தவகை பைலை தேட வேண்டும் என்று கொடுக்கவும்.அடுத்த விண்டோவில் பைல் location தெரியும் என்றால் கொடுக்கலாம்.இல்லாவிட்டால் im not sure என்பதை தெரியலாம்.
next கொடுத்ததும் அடுத்த விண்டோவில் enable deep scan என்பதை கொடுத்தால் மிக ஆழமாக தேடி முடிவுகளை கொடுக்கும்.இதற்கு அதிக நேரம் எடுக்கும்.









start அழுத்தியதும் தேடல் தொடங்கும்.முடிவுகளில் தேவையான file மீது சரி அடையாளத்தை கொடுத்து directory யையும் கொடுக்க வேண்டும்.option விண்டோவை கிளிக் செய்து மேலதிக தெரிவுகளை செய்யலாம்.








பின் recover என்பதை கிளிக்கினால் பைல் மீண்டும் கிடைக்கும்.

பயன்படுத்துகையில் மேலதிக வசதிகளை அறியலாம்.





பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!