Saturday, February 5, 2011

SPECCY
இன்று நாம் பார்க்க இருப்பது SPECCY பற்றி. இது நமது கணனியிலுள்ள ஒவ்வொரு பகுதியினதும் (CPU ,மதர்போட், ரம்,கிராபிக்ஸ் கார்ட், ஹார்ட் டிஸ்க்) தகவல்களை தருவதுடன் அவற்றின் வெப்பநிலையின் அளவுகளையும் தருகிறது. 


நாம் நமது கணனியின் மெமரி ஐ இன்னும் அதிகரிக்கலாமா?அவ்வாறு அதிகரிக்க வழி உண்டா?  என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எத்தனை ஸ்லாட் கள் உள்ளன அதிலே எத்தனை பயன்படுத்தப்பட்டுள்ளது மீதியாக எத்தனை உள்ளது என்பதை அறிந்து கொள்வதுடன் எந்த வகையான மெமரி கார்ட் பாவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம். 


நமது கணணியை விற்க வேண்டும் என்றாலோ அல்லது ஒரு கணணியை வாங்க வேண்டும் என்றாலோ இந்த SPECCY ஐ உபயோகித்து அது பற்றிய தகவல்களை அறிந்து வாங்கலாம் ;விற்கலாம். 
மிக இலகுவாக ஒரே பார்வையில் கணணி பற்றிய தகவல்களை அறிய உதவும் ப்ரோக்ராமை நீங்களும் பயன்படுத்துங்கள்.கருத்தைக்கூறுங்கள்.
இதை பெற செல்ல வேண்டிய முகவரி http://www.download3k.com/System-Utilities/Other-Utilities/Download-Speccy.html 

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!