Friday, November 28, 2014

how to use word 2007 - word 2007 ஐ பயன்படுத்துவது எப்படி?



word 2007 ஐ பயன்படுத்துவது எப்படி? என்று ஒரு வீடியோவை பார்த்தேன் .மிகவும் சுருக்கமாகவும் அதேவேளை தெளிவாகவும் விளக்கப்படுகிறது.

அதாவது ஒரு ஆவணத்தை எவ்வாறெல்லாம் எடிட் பண்ணலாம் என்று விளக்கப்படுகிறது.

word ஐ கரைத்துக்குடித்தவர்கள் தயவுசெய்து பார்க்கவேண்டாம்.


வீடியோ கீழே




Wednesday, November 5, 2014

GOOGLE இல் சிறு FUN

நாம் google ஐ தேடல் தேவைக்காக அதிகம் பயன்படுத்துகிறோம்.
இதைவிடவும் அதில் பல சுவாரசியமான விடயங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வாறான சில சுவையான விடயங்கள் பற்றி இன்று பார்ப்போம்.



1. 360 பாகையில் சுற்ற வேண்டுமா?

search bar இலே do a barrel roll என்று type பண்ணி enter பண்ணுங்கள். நடப்பதை பாருங்கள்.என்ன சுத்துதா?




2. உடைந்து விழும் google 

gravity என்று type பண்ணி முதலில் வரும் link இல் கிளிக் பண்ணவும்.என்ன நடக்கின்றது என பாருங்கள். அதுமட்டுமல்ல link களை தூக்கி எறியலாம்.





3. zerg rush 

மேலே உள்ளதுபோல் type பண்ணி enter பண்ணுங்கள்.பல O கள் வந்து எல்லா link களையும் உண்பதை காண்பீர்கள்.இறுதியாக இரண்டு G கள் மிஞ்சும்.







4. மறையும் எழுத்துக்கள்.

darkartsmedia.com/google.html எனும் முகவரி சென்று அங்கு தோன்றும் google எனும் சொல்லில் இரு O களின் மீது இரு விரல்களையும் வைத்து தேடல்பெட்டியின் வெளியே கிளிக் பண்ணவும். சில செக்கனின் பின் இரு o களும் மறைவதை காண்பீர்கள்.மீண்டும் தோன்ற அதேபோல் செய்யவும்.







5. சரியும் google 



செல்வாக்கு சரிவடையும் என்று கூறுவார்கள்.இங்கே google சரிகிறது.search bar இல் askew என்று type பண்ணி enter பண்ணுங்கள்.என்ன நடக்கிறது என்று பாருங்கள்.









செய்து பாருங்கள்.ஆச்சரியம் அடைவீர்கள்.





Tuesday, November 4, 2014

பயனுள்ள கல்வி தளம்

இன்று நான் சொல்லப்போவது ஒரு பயனுள்ள கல்வி தளம் பற்றி.




அதாவது கணணி,கணிதம் ,தொழில்நுட்பம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்து கற்றுத்தரும் தளம் இது.







முகப்பிலே உள்ள link களில் கிளிக் பண்ணி பாடத்தை படிக்கலாம். அது பல கிளைகளாக பிரிந்து விளக்கமாக பாடங்களை தருகிறது.



உதாரணமாக microsoft office எனும் link ஐ கிளிக் பண்ணினால் அது ms office இன் பல பதிப்புகளுக்கு இட்டுச்செல்லும்.







விரும்பியதை படிக்கலாம்.









படங்களின் உதவியுடன் விளக்குவதுடன்.வீடியோ மூலமும் விளக்கம் தரப்படுகின்றது.




இறுதியாக சிறு பயிற்ச்சியும் தரப்படுகிறது.











இவ்வாறு மாணவர்கள்,பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் உதவும் ஒரு தளமாக இதை கூறலாம்.



தள முகவரி  :   http://www.gcflearnfree.org




பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!