Sunday, March 29, 2015

கணணிதிரைக்கு விரும்பிய படத்தை பின்னணி படமாக இடுவது எப்படி?

இது windows 8 க்கு உரியது. அத்தோடு கணனிக்கு புதியவர்களுக்குமானது.



அதாவது நாம் எமது கணணி திரையில் பின்னணி படங்களை மாற்றுவதாயின் ஏற்கனவே (default) ஆகவுள்ள படங்களையே பயன்படுத்துவோம்.



எனினும் எமக்கு விரும்பிய படங்களையும் இடமுடியும்.



இதற்கு கணணித்திரையில் வலது கிளிக் செய்து personalize சென்று வரும் திரையில் desktop background சென்று picture location இல் browse என்பதை கிளிக் செய்து படங்கள் அடங்கிய folder ஐ தெரிவு செய்து ok பண்ணினால் நீங்கள் தெரிவு படங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.


















விரும்பினால் folder இல் உள்ள எல்லா படங்களையும் தெரிவு செய்யலாம்.அல்லது ஒரு சில படங்களை மட்டும் தெரிவு செய்யலாம்(டிக்).



மேலும் picture position என்பதில் படத்தின் அமைவிடத்தை தீர்மானிக்கலாம்.
change picture every என்பதில் படங்கள் எத்தனை நிமிடங்களில் மாற வேண்டும் என்று கொடுக்கவும்.












எல்லாம் முடிந்தபின் save change ஐ கிளிக் பண்ணினால் சரி.

Friday, March 20, 2015

மென்பொருட்கள் எதுவுமின்றி youtube தளத்திலே காணொளி ஒன்றை பதிவிறக்குவது எப்படி?

நீங்கள்  youtube தளத்தில் பார்த்த ஒரு காணொளி நன்றாக பிடித்துப்போய் -அதை பதிவிறக்க நினைத்து ஏதாவது ஒரு மென்பொருளை தேடி -அதை நிறுவி -url ஐ copy paste பண்ணி (சிலர் இதையே தொழிலாக கொண்டு அலைகிறார்கள்) பதிவிறக்குவதை விட இன்று நான் சொல்லும் வழிமுறையை கையாண்டால் இலகுவாக இருக்கும் என்பதுடன் நேரமும் மிச்சமாகும்.








முதலில் youtube தளம் சென்று நீங்கள் பதிவிறக்க விரும்பும் காணொளியை திறந்து பின் url பட்டையில் www என்பதை அழித்துவிட்டு அவ்விடத்தில் ss என்று தட்டச்சு செய்து enter பண்ணவும்.








திடீரென்று திறக்கும் பாருங்கள் ஒரு தளம்......!!! அங்கே பார்த்தால் பல அளவுகளில் பதிவிறக்க இணைப்புக்கள் காணப்படும். 









உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து பதிவிறக்கலாம். கைப்பேசிகளுக்கு உரிய அளவிலும் உள்ளதுடன் இசை வடிவிலும் தரவிறக்கலாம்.




எனக்கு மிகவும் பிடித்துள்ளது.உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.




youtube தளம் மட்டுமன்றி வேறு சில தளங்களின் காணொளிகளையும் இங்கு பதிவிறக்கலாம்.




Sunday, March 15, 2015

பட கருத்துக்கள் --photo comments





இன்று நாம் பார்க்கப்போவது என்னவென்றால் உங்களின் வசதிக்காக  FB இலே அடிக்கடி பயன்படக்கூடிய சில போட்டோ comments போட்டோக்களை பதிவேற்றியுள்ளேன். நீங்களும் சென்று அதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.

இங்கு செல்க


Friday, March 13, 2015

உங்கள் கணணி மெதுவாக இயங்குகின்றதா? இதோ சில தீர்வுகள்....

அனேகமானோர்களின் பிரச்சினையாக இருப்பது இது. இதற்காக சில தீர்வுகளை மிக மிக மிக  சுருக்கமாக இங்கு பார்ப்போம்.






1.முதலில் நல்லதொரு antivirus மூலம் deep scan பண்ணி வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



2.தேவையற்ற /காலத்துக்கு ஒவ்வாத ப்ரோக்ராம்கள் இருந்தால் அழித்துவிடுங்கள்.


3.அதிக கொள்ளளவு கொண்ட ப்ரோக்ராம்களுக்கு பதிலாக அதே செயற்பாட்டை கொண்ட குறைந்த கொள்ளளவுடைய prog.களை பயன்படுத்தலாம். உதாரணம் ms office க்கு பதிலாக open office ஐ பாவிக்கலாம்.





4.start up இலே இயங்கும் அவசியமற்ற prog.களை disable செய்யுங்கள்.


5.அடிக்கடி restart பண்ணுங்கள். இதனால் ram இன் நினைவகம் கூடும்.




6.visual effect கள் அழகானவைதான்.எனினும் அவை அதிக மெமரிஐ எடுத்துக்கொள்வதால் கணணி மெதுவாக இயங்கும்.எனவே அவற்றையும் desable பண்ணுங்கள்.


7.ஒரேயொரு antivirus prog.மையே பாவியுங்கள்.


8.தேவையற்ற sound களை disable பண்ணுங்கள்.


9.hardware களின் latest driver பதிப்புகளை பயன்படுத்துங்கள்.


10.சிறந்த registry cleaner மூலம் அடிக்கடி clean பண்ணுங்கள்.


இவை யாவற்றையும் செய்து பாருங்கள் நிச்சயம் ஒரு மாற்றம் தெரியும்.


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!