Monday, April 14, 2014

குரலில் தேடலாம் கூகுளில்

முதலில் எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......########


கூகுளில் பல சொற்களின் அடிப்படையில் தேடலாம்.என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.குரலிலும் தேடலாம் என்பது குறைந்த அளவானோருக்கே தெரியும்.

ஆமாம்!!! விசைப்பலகையில் கையே வைக்காமல் நமது குரல் மூலம் கூகுளில் தேடலாம்.

அதற்கு கூகிள் முகப்பு பக்கம் சென்று அங்கு காணப்படும் மைக் icon ஐ கிளிக் செய்யவும்.


பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் speak now  என்று தோன்றும். அப்போது நீங்கள் தேடவேண்டிய சொல்லை கூற வேண்டும்.


பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் search பக்கம் தோன்றும் அதாவது லிங்க்குகள் தோன்றும்.அத்தோடு கூறிய சொல் தொடர்பான குரல் வழி விளக்கம் ஒன்றும் சொல்லப்படும். நான் facebook என்று கூறியதும் பின்வருமாறு காட்டியது.


ஆக இனிமேல் விசைப்பலகையில் தட்டி தட்டி கை வலிக்க வேண்டாம்.வாயாலேயே சொல்லுங்க.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



Sunday, April 13, 2014

right click அறிந்ததும் அறியாததும்

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவரா? என்னைப்போன்ற ஒரு கற்றுக்குட்டியா? அப்படியானால் தொடர்ந்து வாசியுங்கள்.

அதாவது விண்டோஸ் 7 இலே வலது கிளிக் செய்து வரும் மெனுவிலே தோன்றும் option களை நாம் பயன்படுத்துவது மிகவும் குறைவு .

அதனால் அது தொடர்பாக இன்று சற்று பார்ப்போம்.


context menu என்றும் அழைக்கப்படும் இந்த மெனுவிலே முதலாவதாக உள்ளது view 


அதில் icon களின் அளவுகளை மாற்றலாம். சுயமாக icon களை ஒழுங்கு செய்யலாம்.icon களின் ஒழுங்கு வரிசைகளை ஒழுங்குபடுத்தலாம். icon களை மறைக்கலாம். gadget களை  தோன்ற செய்யலாம்.அல்லது மறைய செய்யலாம்.


அடுத்தது sort by அதாவது டெஸ்க்டாப் இல் உள்ள icon களை பெயர் அடிப்படையிலோ அளவு அடிப்படையிலோ வகை அடிப்படையிலோ திகதி அடிப்படையிலோ sort பண்ணலாம்.


அடுத்தது next desktop background என்பதை கிளிக் செய்தால் பின்னணி படம் மாறும்.


அடுத்து new பகுதி அதிலே சில ப்ரோக்ராம்கள் உள்ளன அவற்றை கிளிக் செய்து ப்ரோக்ராமை அடையலாம்.மற்றையது new folder உருவாக்குவது.Briefcase  போன்றவையும் உள்ளது.


அடுத்து screen resolution அதனூடாக திரையின் resolution ஐ மாற்றலாம்.


அடுத்து gadgets அதை கிளிக் செய்து gadget ஐ தோன்ற செய்யலாம்.



அடுத்து Personalization சென்று தனிப்பயனாக்கம் செய்யலாம்.



பயன்படுத்திப்பாருங்கள்.








Saturday, April 12, 2014

windows 7 gadget ஒன்று இன்று

இன்று நாம் ஒரு விண்டோஸ் gadget ஒன்றை பார்ப்போம்.

நீங்கள் விண்டோஸ் 7 பாவனையாளர் எனில் இந்த  gadget  உங்களுக்கு பயன்படும்.

your countdown எனும் பெயர் கொண்ட இதை இங்கு சென்று  பதிவிறக்கி நிறுவுங்கள்.


பின் தோறும் icon இல் setting ஐ கிளிக் பண்ணியதும் தோன்றும் விண்டோ வில் countdown தலைப்பை டைப் பண்ணவும்.நான் சித்திரை புது வருடத்தை டைப் பண்ணியுள்ளேன்.


திகதியையும் நேரத்தையும் டைப் பண்ணி ஓகே பண்ணினால் countdown start ஆகும்.


இது நாம் எதிர்காலத்தில் செய்யவேண்டிய பல விடயங்களை ஞாபகபடுத்தக்கூடியது.

ஆகவே ,


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.



Thursday, April 10, 2014

சில powerpoint செயற்பாடுகள் இன்று......

powerpoint இலே உள்ள சில tab செயற்பாடுகளை இன்று பார்ப்போம்.

இது என்போன்ற கற்றுக்கொண்டிருக்கும் ந(ண்)பர்களுக்கானது .

அதாவது p.p இலே home tab இல் உள்ள paragraph group இல் உள்ள text direction மற்றும் align text ஆகியனவும் design tab இலே உள்ள themes மற்றும் background  ஆகியனவும் பற்றியே இன்று பார்க்கவுள்ளோம்.



text direction என்பதை கொண்டு நாம் தயாரித்த ஆவணத்தை பல்வேறு கோணங்களில் திருப்பலாம்.

more option ஐ கிளிக் பண்ணி மேலும் பல தெரிவுகளை செய்யலாம்


align text என்பதைக்கொண்டு சொற்கள் எங்கே நிலைநிறுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.


more option ஐ கிளிக் பண்ணி மேலும் பல தெரிவுகளை செய்யலாம்.


இனி themes பகுதியிலே ஏற்கனவே தரப்பட்டுள்ள themes களை apply பண்ண முடியும்.




இதைப்போன்றே background styles என்பதை தெரிவு செய்து பின்னணிக்கு பல்வேறு style களை வழங்கலாம்.


format background என்பதை கிளிக் செய்து பல்வேறு மேலதிக வசதிகளை பெறலாம்.


இவ்வாறாக நீங்கள் தயாரித்த ஆவணத்தை உங்கள் விருப்பம்போல் வடிவமைக்க முடியும்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.







Tuesday, April 8, 2014

டயரியாக மாறும் notepad !!!!

இன்று நாம் பார்க்கவுள்ளது notepad ஐ எவ்வாறு ஒரு டயரியாக பயன்படுத்துவது என்பது பற்றியாகும்.இது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும்.தெரியாதவர்களுக்கு பயன்படும்.

முதலில் notepad ஐ திறந்து .log என டைப் பண்ணவும்.



பின்னர் save as சென்று my diary என்றோ அல்லது வேறு ஒரு பெயரிலோ save பண்ணவும். டெஸ்க்டாப் இலே save பண்ணுவது வசதியாக இருக்கும்.





பின்னர் save பண்ணிய file ஐ திறந்தால் பின்வருமாறு தோன்றும்.





அதிலே நீங்கள் குறிப்புக்களை எழுதியபின் save பண்ணவும்.
அவ்வளவுதான்.

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


Sunday, April 6, 2014

ads தொல்லை இனி இல்லை

நாம் facebook பயன்படுத்துகையில் பல்வேறு விளம்பரங்கள் வந்து தொல்லை தரும்.அவற்றையெல்லாம் நீக்கி நிம்மதியாக facebook ஐ பயன்படுத்த இந்த extension உதவும்.(குரோம் பயனாளர்களுக்கு மட்டும்.)



இங்கு சென்று இன்ஸ்டால் பண்ணியதும்.அட்ரஸ் பாரில் அது காணப்படும்.



அதன் பின்னர் facebook ஐ ஓபன் பண்ணி பாருங்கள்.எந்த விளம்பரங்களும் இருக்காது.



இன்ஸ்டால் பண்ண முன் 





இன்ஸ்டால் பண்ணிய பின் 





பயன்படுத்திப்பாருங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இங்கு உள்ள ஓட்டு பட்டைகளை கிளிக் பண்ணினால் போதும்.


Saturday, April 5, 2014

ஆங்கிலம் கற்க ஒரு apps

இன்று நாம் பார்க்க போவது ஆங்கிலத்தை இலகுவாக கற்றுத்தரும் ஒரு குரோம் apps பற்றி.

learn english எனும் பெயர் கொண்ட இந்த apps ஐ இங்கு சென்று இன்ஸ்டால் செய்க.



நிறுவிய பின் தோன்றும் பக்கத்தில் அடிப்படையில் இருந்து அட்வான்ஸ் வரை படிப்படியாக உள்ளது. 


எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்கிறது.ஓடியோவும் உள்ளது.


இலக்கணமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.


அருகிலுள்ள bar மூலமாக உங்களுக்கு வேண்டிய பகுதியை தெரிவு செய்யலாம்.


எல்லாம் படித்து முடித்தபின் (?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) exam ஒன்றும் உள்ளது.அதற்கு விடை அளித்து உங்களது திறமையை (?!) பரீட்சிக்கலாம். நான் 100 க்கு 100 எடுத்துள்ளேன். (அதிசயம் ஆனால் உண்மை )





எனவே இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த apps ஐ பயன்படுத்தி ஆங்கிலத்தில் திறமையை வளர்த்துக்கொள்ளலாமே ?

பயன்படுத்துங்கள் .பயன்பெறுங்கள்.






Friday, April 4, 2014

பேஸ்புக் போட்டோ சூம் -facebook photo zoom

இன்று நாம் பார்க்கவுள்ளது.facebook இலே உள்ள போட்டோக்களை எப்படி பெரிதாக்கி பார்ப்பது என்பது பற்றியது.

இங்கு  சென்று டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணவும்.

அல்லது குரோம் பயன்படுத்துபவர்கள் இங்கு சென்று பதிவிறக்கவும்.

அது ஒரு extension ஆக டவுன்லோட் ஆகும்.

பின் extensions பகுதிக்கு சென்று பார்த்தால் அது காணப்படும்.



இனி facebook சென்று பார்த்தால் அது chat பகுதிக்கு அருகில் காணப்படும்.



படங்களின் மேல் கர்சரை கொண்டு சென்றால் அந்த படத்தின் உண்மையான அளவை காட்டும்.



குறிப்பு :   இங்கு காணப்படும் ஓட்டுபட்டைகளை கிளிக் செய்து எல்லா நண்பர்களும் பயன் பெற உதவுங்கள்.நன்றி.


பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

Wednesday, April 2, 2014

word 2007 இல் paragraph group இல் சில செயற்பாடுகள் - some activities at paragraph group in word 2007

முதலில் இந்த பதிவு என்னைப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு உரியது என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அதாவது word இலே உள்ள home lab இலே உள்ள paragraph group இலே எவ்வாறு செயற்படலாம் என்பதை பார்ப்போம்.



நீங்கள் டைப் பண்ணிய சொல்லை அல்லது பந்தியை எவ்வாறு paragraph ஊடாக மெருகூட்டலாம் என்று பார்ப்போம்.

சொல்லை தெரிவு செய்துகொண்டு முதலாவதாக உள்ள bullet ஊடாக பொருத்தமான பகுதிகளுக்கு அழகான bullet வழங்கலாம்.



அதுபோன்று  numbering பகுதியில் இலக்கங்கள் மற்றும் எழுத்துக்களை வழங்கலாம்.



மற்றையது alignment பகுதியில் left,center,right போன்றவற்றை தெரிவு செய்யலாம். 

line spacing இலே வரிகளுக்கிடையே இடைவெளியை மாற்றி அமைக்கலாம்.

shading பகுதி மூலம் தெரிவு செய்த பகுதிக்கு விரும்பிய பின்னணி நிறங்களை வழங்கலாம்.



bottom border மூலம் தெரிவு செய்த பகுதிக்கு border வழங்கலாம்.


இவ்வாறு பல வசதிகளும் கொண்ட word தொகுப்பை பயன்படுத்தி உங்களது ஆவணங்களை அழகாக்கலாம் .

பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!