Monday, February 28, 2011

படங்களை ஐகன்களாக மாற்றலாம்

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஐகன்கள் அந்த ப்ரோக்ராமை உருவாக்குபவர்கள் தரும் ஐகன்களாகவே இருக்கும். இல்லாவிட்டால் அந்த ஐகன் மீது வலது கிளிக் செய்து properties சென்று மாற்றுவோம்.ஆனால் நாம் விரும்பிய படத்தை ஐகனாக மாற்றினால்.....அதற்காகவே உள்ளது easy picture 2 icon. 


இந்த  மென்பொருள் மூலம் நம் கணனியிலுள்ள படங்களை ஐகன்களாக மாற்றி சோர்ட் கட் ஆக வைத்துக்கொள்ளலாம்.
எவ்வாறு மாற்றுவது? 
முதலில் இடைமுகத்தை திறந்துகொண்டு open picture என்பதை கிளிக் செய்து விரும்பிய படத்தை திறந்து கொள்ள வேண்டும்.



பின்னர் icon sizes to include என்பதிலே விரும்பிய அளவை தெரிவு செய்ய வேண்டும்.உதாரணம் 32 *32 .transparent color என்பதை டிக் செய்தால் படம் கலர் இல்லாமல் வரும்.பின்னர் save icon என்பதை கிளிக் செய்து படத்தை சேமிக்க வேண்டும்.


இனி எந்த சோர்ட் கட் இன் icon ஐ மாற்ற வேண்டுமோ அதன் மீது வலது கிளிக் செய்து properties ----customize ------change icon சென்று browse சென்று நீங்கள் உருவாக்கிய icon ஐ தெரிவு செய்து ok கொடுத்து apply செய்ய வேண்டியதுதான்.

  

Sunday, February 27, 2011

எல்லாம் அடங்கிய UM PLAYER

இது ஒரு மல்டிமீடியா பிளேயர்.


டசின் கணக்கான வசதிகளுடனும் எந்தவகையான போர்மட்களையும் ஆதரிக்க கூடியதுமான  இதனைக்கொண்டு AUDIOCD ,DVD ,TV /ரேடியோகார்ட்ஸ் போன்றவைகளை இயக்க முடிவதுடன் ONLINE இல் இருக்கும்போது YOUTUBE வீடியோ களை தேடி அதை பார்க்கவும் முடியும்.



வீடியோவை YOUTUBE தளத்தில் பார்ப்பதைவிட இங்கு நன்றாக பார்க்கமுடியும் என்பது எனது கருத்து.மேலும் அந்த வீடியோ நமக்கு பிடித்திருந்தால் பதிவு செய்யவும் முடியும்.பதிவு செய்யும் வேகமும் மிக அதிகம்.




 முழுமையாக டவுன்லோட் செய்யப்படாத(UNCOMPLITE )பைல்களையும் இயக்கலாம். 
இதைவிட விரும்பிய ஸ்கின் களை மாற்றலாம்.


147KB என்னும் மிக சிறிய கொள்ளளவுடைய இந்த UM PLAYER ஐ பாவிக்கும்போது இவ்வளவு வசதிகளா?என்று ஆச்சரியப்படப்போவது உறுதி.

Saturday, February 26, 2011

பயனுள்ள SIMPLE TTS READER

இது  ஒரு  சிறிய  கிளிப்போர்ட் வாசிப்பான்.இதை நிறுவியவுடன் நீங்கள் TEXT களை COPY செய்தால் உடனடியாகவே இது பேச ஆரம்பிக்கும். இதைவிட விரும்பிய சொல்லை TYPE செய்தும் கேட்கும் வசதி உள்ளது. இதற்காக TYPE செய்யும் இடத்தில் சொல்லை TYPE செய்து TEST என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் ஒலியை கூட்டி குறைக்கவும் முடியும்.பேசும் வேகத்தை கூட்டி குறைக்கவும் முடியும்.





மிகவும் பயனுள்ள மென்பொருள்.பயன்படுத்தி பாருங்கள். இதை பெற செல்ல வேண்டிய முகவரி : http://www.download3000.com/download-simple-tts-reader-count-reg-50430.html  

Thursday, February 24, 2011

நேரம் மற்றும் திகதி காட்டும் WATCH

என்னதான் கணனியில் கடிகாரம் இருந்தாலும் தனியாக ஒரு கடிகாரம் டெஸ்க்டாப் இலே இருந்தால் நல்லதுதானே? அதுவும் திகதியுடன்.நேரம் திகதி என்பன எந்த நேரமும் ஓடிக்கொண்டிருப்ப்பதால் உடனடியாக பார்க்கமுடியும்தானே? அவ்வாறான ஒரு கடிகாரம்தான் WATCH.

மிகவும் சிறிய கொள்ளளவு உடைய இது அலாரம் வசதியும் உடையது.விரும்பிய இடத்திலே ட்ராக் முறையில் இழுத்து வைக்கலாம்.
இதன் மேல் மௌஸ் முனையை வைத்து வலது கிளிக் செய்ததும் வரும் மெனுவில் HELP ,SET  ALARM , DATE ,SOUND ,COLOURS போன்றவை உள்ளன.அவற்றிலே தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

FONT இன் COLOUR ஐ மாற்ற முடிவதுடன் அளவையும் மாற்றலாம்


 இதன் மேல் மௌஸ் ஐ கொண்டு சென்றதும் அன்றைய திகதியை காட்டும்.
நிறுவாமலே நேரடியாக பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பல வசதிகளையுடைய WATCH ஐ நீங்களும் பயன்படுத்தி பயனடையுங்கள்.
இதை பெற செல்ல வேண்டிய முகவரி :     http://watch.soft32.com/free-download   

Wednesday, February 23, 2011

சிறந்த REGISTRY CLEANER

சில வேளைகளில் கணனியின் REGISTRY ஆனது ப்ரோக்ராம்கள் அழிக்க படும்போதும்  நிறுவும்போதும் உண்டாகும் என்ட்ரி களினால் நிரம்பி காணப்படுவதுடன் கணனியின் வேகமும் மந்தமாகின்றது.இவ்வாறான வேளைகளிலே நாம் எதாவது ஒரு CLEANER கொண்டு அவற்றை அழிப்போம்.சில CLEANER கள் எல்லா ERROR களையும் FIX செய்வதில்லை. 
ஆனால் இந்த CLEANER மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.REGISTRY ஐ ஸ்கேன் செய்து ERROR களை அழிப்பதுடன் கணணியை வேகமாகவும் இயங்க செய்வதுடன் ப்ரோக்ராம் களை வேகமாகவும் திறக்க செய்கிறது.
இதனுடைய இடைமுகமானது பயன்படுத்த இலகுவானது.




பின்வரும் அம்சங்களை ஸ்கேன் செய்கிறது.(ஆங்கிலத்தில்)
  • Missing Shared Dlls
  • Unused File Extension
  • Invalid ActiveX
  • Invalid Help Files
  • Invalid Paths
  • Sound and App Events
  • Obsolete start menu order
  • Invalid Fonts
  • Invalid application paths
  • Invalid startup programs
  • Invalid custom controls
  • Missing Shortcut reference
  • Obsolete Software Key
  • Invalid Installer reference
  • Missing File and Folder
  • And Much More...
    செயற்படுத்துவது எவ்வாறு? 
    இடைமுகத்திலே உள்ள SCAN REGISTRY ISSUES எனும் டப் ஐ கிளிக் செய்ததும் ஸ்கேன் ஆரம்பமாகும்.அதற்குமுன் SELECT THE SECTION TO SCAN என்பதில் ஸ்கேன் பண்ண வேண்டியவற்றை தெரிவு செய்ய வேண்டும்.




    ஸ்கேன் செய்து முடிந்ததும் REPAIR REGISTRY ISSUES என்பதை கிளிக் செய்தால் CLEAN செய்யப்பட்டு விடும். ஏதாவது தவறுகள் ஏற்படுமோ என்று அஞ்சினால் BACK UP செய்து கொள்ளலாம்.அதற்கு FILE மெனு சென்று BACKUP FULL REGISTRY என்பதை தெரிவு செய்ய வேண்டும்.




    பயன்படுத்தும்போது மேலதிக வசதிகள் பற்றி அறிவீர்கள். 
    இவ்வாறாக பயன்படுத்த இலகுவானதும் அதேவேளை மிகமிக சிறிய கொள்ளளவுடயதுமான இந்த CLEANER ஐ நீங்களும் பயன்படுத்துங்கள்.பயனடையுங்கள்.

Monday, February 21, 2011

ரெட் பட்டன் - RED BUTTON



இன்று நாம் பார்க்கப்போவது ரெட் பட்டன் பற்றி. இது ஒரு WINDOWS OPTIMIZATION ப்ரோக்ராம் ஆகும். பல தேவையற்ற பைல்களையும் ப்ரோக்ராம் களையும் இன்னோரன்ன விடயங்களையும் மேற்கொண்டு கணனியின் வேகத்தையும் அதிகரிக்கிறது.இயக்குவதற்கு இலகுவான இடைமுகத்தையும் கொண்டது.


இதை எவ்வாறு இயக்குவது என்பதை பார்ப்போம்.இடைமுகத்திலே உள்ள FEATURES என்பதை கிளிக் செய்தவுடன் கீழ்வரும் விண்டோ திறந்துகொள்ளும்.

பின்னர் அதிலுள்ள TAB களில் நமக்கு தேவையானதை தெரிவு செய்து ANALYSE செய்ய வேண்டியவைகளை டிக் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் ANALYZE எனும் பொத்தானை கிளிக் செய்ததும் ANALYZE ஆரம்பமாகும்.எல்லாம் முடிந்ததும் OK என்பதை கிளிக் செய்ததும் மீண்டும் ரெட் பட்டன் இடைமுகம் தோன்றும்.அதிலுள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தியதும் OPTIMIZE ஆரம்பமாகும்.

பின்னர் பின்வரும் செய்தி தோன்றும்.


OK என்பதை கிளிக் செய்ததும் CLOSE ஆகும்.இவ்வாறு ஏனைய TAB களில் உள்ளவைகளையும் மேற்கொள்ள வேண்டும். நான் சொல்வதை விடவும் நீங்கள் பயன்படுத்தும் போது அதன் மேலதிக வசதிகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
211KB எனும் மிகவும் சிறிய கொள்ளளவுடைய ரெட் பட்டன் ஐ பெற செல்ல வேண்டிய முகவரி:             http://www.nonags.com/freeware-red-button_3802.html  

(படங்களை  பெரிதாக்கி  பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யவும்.)   

  










  





Sunday, February 20, 2011

வின் மேட்

இன்று நாம் பார்க்கவுள்ள மென்பொருள் வின் மேட் .மிக மிக சிறிய கொள்ளளவுடைய இந்த மென்பொருளைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இதனை இன்ஸ்டால் செய்து திறந்து கொண்டதும் பின்வரும் இடைமுகம் தோன்றும். அதிலே scan and clean என்பதை கிளிக் செய்ததும் pc diagnosis,junk cleans,trace clean,registry clean,duplicate file scan ஆகிய tab கள் காணப்படுகின்றன.
நமக்கு தேவையான tab ஐ தெரிவு செய்ததும் அதுவாகவே செயற்பாட்டை தொடங்குகிறது.பின்வரும் படத்திலே பார்த்தால் என்ன என்ன வகையான error களை நீக்குகிறது என்பதை அறியலாம்.


அது போலவே junk clean tab ஐ கிளிக் செய்து தேவையற்ற பைல்களை டிக் செய்து அழிக்கலாம்.trace clean ,registry clean போன்றவையும் அது போலவே.


duplicate file scan   எனும் tab இலே நம் கணனியில் உள்ள duplicate file களை அழிக்கலாம்.அதற்கு போல்டர்களை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் start scan எனும் பட்டனை அழுத்த வேண்டும்.
 


இதே போன்று system optimize என்பதிலே os optimize ,memory tweak போன்ற வசதிகள் உள்ளன.

 program manager  பகுதியிலே கணனியில் நிறுவியுள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்யலாம்.

general tool என்பதிலே utilities என்பதில் உள்ள வசதிகளை பாருங்கள்.

வெறும் 613 kbஅளவே உள்ள இந்த மென்பொருளில் இவ்வளவு வசதிகளா?என்று ஆச்சரியம் வருகிறது. இதை பயன்படுத்தும்போது மேலதிக வசதிகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.(படங்களை பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.)
winmate ஐ பெற செல்ல வேண்டிய முகவரி: http://www.softpedia.com/progDownload/WinMate-Download-180341.html  

Saturday, February 19, 2011

தானியங்கி சுவர்தாள் மாற்றி

என்னடா இது புதுவிதமான் ஒரு கருவியோ என்று எண்ண வேண்டாம். AUTOMATIC WALLPAPER CHANGER என்பதன் தமிழ் கருத்துதான் இது.
நம் கணனியின் WALLPAPER ஐ நாம் அடிக்கடி மாற்றுவது இயல்பு. மன நிலைக்கு ஏற்ப WALLPAPER ஐ மாற்றிக்கொண்டிருப்போம். அவ்வாறு மாற்றுவதற்காக WALLPAPER அடங்கிய FOLDER சென்று விரும்பிய படத்தை தெரிவு செய்வோம்.இதையே தானியங்கியாக மாறும்படி ஆக்கிட்டா...........!! .இதையே இந்த ப்ரோக்ராம் செய்கிறது. http://www.nonags.com/freeware-automatic-wallpaper-changer_463.html  இங்கு சென்று தரவிறக்கி கொள்ளவும். பின்னர் இன்ஸ்டால் செய்து SHORTCUT ICON மூலம் திறந்து கொள்ளவும்.


இதில் ADD என்பதை கிளிக் செய்து WALLPAPER அடங்கிய FOLDER ஐ தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்பின் TIME  என்பதிலே எத்தனை செக்கனுக்கு அல்லது நிமிடத்துக்கு அல்லது மணிக்கு ஒருதடவை மாற வேண்டும் என்பதை செட் செய்து கொள்ள வேண்டும். 

அடுத்த WALLPAPER மாறுவதற்கு  இன்னும் எத்தனை நிமிடங்கள் உள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.பயன்படுத்திபர்க்கும்போது நீங்களே பல வசதிகள் பற்றி அறிவீர்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்து ஒன்றை பதிவு செய்யுங்கள்.                                     நன்றி. 

Friday, February 18, 2011

WINYL மியூசிக் பிளேயர்

மிகவும் சிறிய கொள்ளளவுடைய அதேவேளை புதிய ஒரு மியூசிக் பிளேயர் பற்றித்தான் இன்று பார்க்க போகிறோம். வலது புறம் காணப்படும் OPTION களை கொண்டு பாடல்களை தலைப்பு வாரியாகவோ ஆண்டு வாரியாகவோ படத்தின் பெயர் வாரியாகவோ தெரிவு செய்து கேட்கலாம்.



 விண்டோவின் மீது மவுசை வலது கிளிக் செய்து வரும் மெனுவில் LIBRARY என்பதை தெரிவு செய்ததும் தோறும் விண்டோவில் ADD என்பதை கிளிக் செய்து கணனியில் சேமிக்கப்பட்டுள்ள பாடல்களை சேர்த்துக்கொள்ளலாம்


SKIN என்பதை தெரிவு செய்து விருப்பமான SKIN களை தெரிவு செய்யலாம். 


EQUALIZER என்பதை தெரிவு செய்து ஒலியின் தரத்தை பேணலாம்

ONLINE இல் ரேடியோ களை கேட்கும் வசதியும் உள்ளது. ரேடியோ என்பதை தெரிவு செய்து நமக்கு விருப்பமான ரேடியோவை தெரிவு செய்து கேட்கலாம்.

இவ்வாறு பல வசதிகள் கொண்ட இந்த மியூசிக் பிளேயர் ஐ நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கருத்து ஒன்றை கூறுங்கள். 
இதை பெற செல்ல வேண்டிய முகவரி : 
 

Thursday, February 17, 2011

விண்டோஸ் HIDER

இன்று நாம் பார்க்க போவது விண்டோஸ் HIDER பற்றி.இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய சிறிய UTILITY .அத்தோடு விரைவாகவும் விண்டோகளை மறைய /தோன்ற செய்கிறது. இதை தோன்ற செய்ய ஹாட் கீக்களையும் உபயோகிக்கலாம். 

இதன் மூலம் தனி விண்டோ வை மட்டும் மறைய செய்யலாம்.ஒரே நேரத்தில் எல்லா விண்டோகளையும் மறையவும் செய்யலாம். இதற்கு SYSTEM TRAY இலுள்ள ICON மீது வலது கிளிக் செய்து வரும் மெனுவில் SHOW /HIDE ALL WINDOW என்பதை தெரிவு செய்ய வேண்டும். 


டெஸ்க்டாப் இலுள்ள ICON களையும் மறைய/தோன்ற செய்யலாம். மேலே உள்ள SCREEN SHOT இலே பாருங்கள். அதிலுள்ள SHOW /HIDE DESKTOP ICON என்பதை தெரிவு செய்ததும் ICON கள் மறைந்துவிடும் மீண்டும் அதன் மீது கிளிக் செய்தால் மீண்டும் தோன்றும்.


அது மட்டுமல்ல டாஸ்க்பார் ஐயும் மறைய/தோன்ற செய்யலாம் .(மேலே உள்ள படம்)
நீங்கள் பயன்படுத்தும் பொது இதன் வசதிகளை புரிந்து கொள்வீர்கள். பயன்படுத்தி பாருங்கள் .கருத்து ஒன்றை கூறுங்கள். 
இதனை பெற செல்ல வேண்டிய முகவரிwww.window-hide.com/    

(படத்தை பெரிதாக்க அதன் மீது கிளிக் செய்யவும்.)

Sunday, February 13, 2011

Magnifying Glass

இன்று நாம் பார்க்க இருப்பது  Magnifying Glass பற்றி. இது உயர்தரமான ஜூமிங் கிளாஸ் என்றால் மிகையாகாது. மிக சிறிய கொள்ளளவு கொண்டது.



நமக்கு தேவையான பகுதியை இதன் மூலம்  தெரிவு செய்து பார்க்கலாம். இன்ஸ்டால் செய்ததும் கணணி திரையில் அமர்ந்து கொள்ளும். பிரேம் தேவையில்லை என்றால் அதை நீக்கிக் கொள்ளலாம். அதற்கு கிளாஸ் மீது ரைட் கிளிக் செய்து hide frame என்பதை தெரிவு செய்ய வேண்டும். 


இதன் மூலம் பிடிக்கப்பட்ட பகுதியை save செய்வதற்கு ரைட் கிளிக் செய்து வரும் copy to clipboard  என்பதை கிளிக் செய்து விட்டு ஏதாவது ஒரு பெயிண்ட் போன்ற ப்ரோக்ராம் மூலமாக திறந்து கொள்ளலாம். 


மூன்று விதமான lence காணப்படுகிறது. விரும்பியதை தெரிவு செய்யலாம்.fun lence மூலம் பெற்ற ஒரு காட்சி இது.  


இவ்வாறு பல் வசதிகளையும் கொண்ட இந்த  Magnifying Glass  ஐ நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கருத்து ஒன்றை பதிவு செய்யுங்கள். 

Magnifying Glass  ஐ பெற செல்ல வேண்டிய முகவரி 




Thursday, February 10, 2011

CPU-Z

இன்று நாம் பார்க்க இருப்பது CPU -Z பற்றி.இது  நம் கணனியின் CPU ,மதர்போட்,மெமரி போன்றவற்றின் தகவல்களை தருகிறது ஒரே பார்வையில். மிக அவசியமான ஒரு ப்ரோக்ராம் .


CPU -Z   ஆனது 806KB அளவு உடைய சிறிய மென்பொருள். REGISRTRY இலே எந்தவித VALUES  களையும் உருவாக்காது என்பதுடன் நிறுவவும் தேவையில்லை. ZIP FILE ஐ ஓபன் பண்ணியதுமே பயன்படுத்தலாம். 

இது நமது CPU பற்றிய பின்வரும் தகவல்களை தருகிறது

  • Name and number.
  • Core stepping and process.
  • Package.
  • Core voltage.
  • Internal and external clocks, clock multiplier.
  • Supported instructions sets.
  • All cache levels (location, size, speed, technology)
இது நமது மதர்போட் பற்றிய பின்வரும் தகவல்களை தருகிறது


  • Vendor, model and revision.
  • BIOS model and date.
  • Chipset (northbridge and southbridge) and sensor.
  • Graphic interface

                        இது மெமரி,சிஸ்டம் பற்றிய பின்வரும் தகவல்களை தருகிறது

  • Frequency and timings.
  • Module(s) specification using SPD (Serial Presence Detect) : vendor, serial number, timings table.
  • Windows and DirectX version.

நீங்களும் பயன் படுத்தி பாருங்கள் .கருத்தை கூறுங்கள். இதை பெற செல்ல வேண்டிய முகவரி 

Wednesday, February 9, 2011

  360 AMIGO
இன்று நாம் பார்க்க இருப்பது 360 AMIGO பற்றி .SYSTEM UTILITY ஆன இது நாம் கணணியை வேகமானதாகவும்  அதேவேளை பாதுகாப்பானதாகவும் இயங்க செய்கிறது. இதன் வசதிகள் சொல்லி மாளாது. 
HOME எனும் பகுதியிலே STATISTICS என்பதில் எத்தனை ERROR கள் உள்ளன அதிலே எத்தனை அழிக்கப்பட்டன என்பதை காட்டுகிறது. 

CLEANUP என்பதிலே அழிக்கப்படுகின்ற ERROR களை காட்டுகின்றது.

CHECKUP என்பதிலே கணனியின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை காட்டுகின்றது.இதற்கு CHECKUP NOW என்ற பட்டனை அழுத்த வேண்டும்

அத்தோடு நாம் சிஸ்டம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை காட்டும் பகுதியும் உள்ளது. 


SYSTEM INFORMATION பகுதி கணனியின் பல தகவல்களையும் தருகிறது


SYSTEM CLEANER எனும் பகுதியிலே 4 TAB கள் உள்ளன. அதிலே டூல்ஸ் பகுதியை பாருங்கள். 



DRIVERS பகுதியிலே கணணி கொண்டுள்ள டிரைவர் களின் விபரங்களை காணலாம். 


UNINSTALLER பகுதியிலே தேவையற்ற ப்ரோக்ராம் களை நீக்கிக்கொள்ளலாம். 


FILE RECOVERY என்பதிலே முன்பு அழித்த FILE  களை மீண்டும் பெறும் வசதி உள்ளது.SYSTEM INFORMATION எனும் பகுதியிலே கணணி பற்றிய பல தகவல்களை பெறலாம். 


இது போன்ற இன்னும் பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.பதிவு பற்றிய கருத்தை கூறுங்கள் .நன்றி 

இந்த மென்பொருளை பெற செல்ல வேண்டிய முகவரி www.360amigo.com/es/download 

(படத்தை  பெரிதாக்கி  பார்க்க  படத்தின்  மேல்  கிளிக்  செய்யுங்கள் ).   
     









       

Monday, February 7, 2011

FREE INTERNET TELEVISION

இன்று நாம் பார்க்கப்போவது FREE INTERNET TV பற்றி. உலகிலுள்ள சுமார் 250 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளையும் WEBCAM காட்சிகளையும் கொண்ட அருமையான ஒரு மென்பொருள் இது. 

தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமல்ல வீடியோ காட்சிகளையும் பார்க்கும் வசதி உள்ளது. வீடியோ எனும் பகுதியை தெரிவு செய்ததும் அதிலே பல்வேறு வகையான் வீடியோகள் காணப்படுகின்றன .TYPE எனும் பகுதியிலே விரும்பியதை தெரிவு செய்து பார்க்கலாம். 

ரேடியோ வசதியும் இதிலே காணப்படுகிறது. ரேடியோ என்ற பட்டனை தெரிவு செய்ததும் உலகிலுள்ள ரேடியோ அலைவரிசைகள் நமது பார்வைக்கு வரும். அதிலே விரும்பிய மொழியை TYPE  என்பதில் தெரிவு செய்து கேட்கலாம். 
அதுமட்டுமல்ல நமது கணணியிலே உள்ள பாடல்களையும் கேட்கலாம். 

இவ்வாறு பல வசதிகளை  கொண்ட இந்த மென்பொருளை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். பதிவு எப்படி உள்ளது என்பது பற்றி ஒரு வசனமாவது எழுதுங்கள். நன்றி. 
இதை பெற செல்ல வேண்டிய முகவரி :   http://www.ksourcerer.org/26306/download-free-internet-
(படத்தை  பெரிதாக்கிப்பார்க்க படத்தின்மேல் கிளிக் பண்ணுங்கள்.)   


  

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!