Sunday, April 24, 2016

WORD 2007 இல் VIEW TAB இல் செய்யக்கூடியவை --புதியவர்களுக்கு மட்டும்

word இல் ஆவணங்களை தயாரித்து பயன்படுத்துகையில் பல tab களின் உதவியுடன் அவற்றை செம்மையாக்குவோம்.
அந்த வகையில் இன்று view tab இலுள்ள document views,show/hide,zoom ஆகியவை பற்றி பார்ப்போம்.
முதலில் உள்ள document views இல் print layout என்பது வழமையான பக்கமாகும்.




அடுத்துள்ள full screen reading என்பது முழுமையான பக்க பார்வையை கொடுக்கும் பகுதி.அதிலும் பல அம்சங்கள் உள்ளன.அடுத்த பக்கம் செல்ல ---> அம்புக்குறியும் முன் பக்கம் செல்ல <---- அம்புக்குறியும் உதவும்.மூட close ஐ கிளிக் பண்ணவும்.





web layout என்பது நாம் தயாரித்த ஆவணம் இணையப்பக்கமாக எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை காட்டும்.






outline view என்பது எல்லாப்பக்கங்களையும் ஒரே கோட்டில் வைத்து பார்க்க உதவும்.draft என்பதும் கிட்டத்தட்ட இதுபோன்றுதான்.












இனி show/hide இலே ruler ஐ தெரிவு செய்தால் ruler தென்படும்.grid line என்பதை தெரிவு செய்தால் பக்கம் முழுவதும் கோடுகள் தென்படும்.இதைக்கொண்டு சில செம்மைப்படுத்தல்களை செய்யலாம்.








thumbnail என்பது பக்கங்களை சிறு பார்வையாக தருவது.இதன் மூலம் நமக்கு தேவையான பக்கத்தை இலகுவாக பார்த்துக்கொள்ளலாம்.அதில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.





இனி zoom பகுதியில் zoom என்பதை தெரிவு செய்தால் ஒரு விண்டோ தோன்றும். அதில் மாற்றங்களை ஒரே பார்வையில் செய்து கொள்ளலாம்.100% என்பது உண்மையான அளவை காட்டும்.






இதேபோல் one page என்பதை தெரிவு செய்தால் பக்கங்கள் ஒவ்வொன்றாக காட்டப்படும்.two pages என்பதை தெரிவு செய்தால் பக்கங்கள் இரண்டிரண்டாக காட்டப்படும்.page width என்பது நல்ல அகலத்தில் -அதாவது 104% இல் காட்டப்படும்.











எனவே நீங்களும் இவற்றையெல்லாம் பயன்படுத்துங்கள். பயன் பெறுங்கள்.


No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!