Sunday, March 13, 2011

கண் மீது அக்கறை உள்ள EYES RELAX

நீங்கள்  கணணியை தொடர்ச்சியாக பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் அவசியம்.இது அப்படி என்னதான் செய்கிறது? நமது கண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கசொல்லி ஞாபகம் ஊட்டுகிறது அவ்வளவுதான்.


இதை எவ்வாறு செயற்படுத்துவது? முதலில் BREAKS எனும் டப் இலே எத்தனை நிமிடத்தின் பின் ஓய்வு தேவை என்பதை குறிப்பிட வேண்டும்.பின் மீண்டும் எத்தனை செகனில் தொடங்கவேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்டவுடன் கீழே COUNDOWN ஆரம்பமாகும்.நாம் குறிப்பிட்ட நிமிடம் முடிந்ததும் ஒலியுடன் கூடிய பின்வரும் மெனு தோன்றும்.


பிரேக் டைம் முடிந்ததும் பின்வரும் மெனு SYSTEM TRAY இலே தோன்றும்.


அதன் பின் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதன் பணி தொடரும்.

இவ்வாறு மேலும் பல சிறப்புக்கள் கொண்டது மட்டுமல்ல சிறிய கொள்ளளவும் உடைய இதனை நிறுவாமலே சிப் பைலாக பயன்படுத்தலாம்.பயன்படுத்துங்கள்.பயன்பெறுங்கள்.

முகவரி :   http://themech.net/eyesrelax/   



   

No comments:

Post a Comment

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!